கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Category Archives: மொக்கைகள்

டாக்டர் …

முன் குறிப்பு ::
முன் குறிப்பெல்லாம் ஒன்னும் இல்ல, மேட்டரு கீழ இருக்கு …

நண்பன் கமலக் கண்ணனுக்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாமல் போன போது, (பல நாள் உடம்பு சரி இல்லாமல் போகும், அதில் ஒரு நாளை) என்னுடன் கழித்தான்.

“மச்சி நல்ல டாக்டரப் போய் பாக்கனும் டா உடம்பு சரி இல்ல, கோல்டும், பீவருமா இருக்கு” னு சொன்னான். நான் அவன் கிட்ட சொன்னேன், “மச்சி நம்ம ஏரியாவுல இருக்கற டாக்டருங்க எல்லாரும் போலி டாக்டர் தான், இருந்தாலும் இவங்கள்லயே தலை சிறந்த போலி டாக்டர் யாரோ அவர தான் நாம போய் பாக்கனும் டா” னு சொன்னேன். இவ்வாறாக நாங்கள் இருவரும் முடிவெடுத்து எங்கள் ஏரியாவில் இருக்கும் ‘ஒரு’ ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.

‘அந்த’ ஆஸ்ப்பத்திரியின் ரத்த சரித்திரம்:
தோராயமாக 12 வருடம் முன்பு, உடம்பில் ஏதோ ஒரு சின்ன பிரச்னைக்காக ‘அந்த’ ஆஸ்பத்திரியின் தலைமை (??) மருத்துவர் அற்ப்புதமாக சிகிச்சை கொடுத்து, உயிரோடு இருந்தால் இந்நேரம் தனது மகனுக்கு நல்ல தந்தையாக, நன்றாக வாழ்ந்திருக்க வேண்டிய ஒருவரை, pack-up செய்து அனுப்பி வைத்த கல்வெட்டுகளைத் தாங்கி இன்றும் கம்பீரமாக நிற்க்கும் பெருமையைக் கொண்டது.

இன்றும் கூட்டம் வருகிறது ‘அந்த’ ஆஸ்பத்திரிக்கு. மலிவு விலை மருத்துவர் போல. கமலக் கண்ணன் எப்போதும் ‘cold’ க்குதான் அங்கு செல்வான். அதற்க்கு ஒரு காரனமும் சொல்வான் “அந்த டாக்டர் கொடுக்கற மருந்து போதை மருந்து மாதிரிடா.. அருமையா தூக்கம் வரும், ரெண்டு மூனு நாளைக்கு நாம ஒரு மாதிரியான போதையோடவே இருக்கலாம்” னு சொல்லுவான். ஒரு வேளை இப்படி இருக்குமோ என்று நான் நினைப்பது உண்டு. டாஸ்மாக் போனா காசு அதிகம் ஆகும், சரக்கு, மிக்சிங்கு, சைடு டிஷு, சிகரட்டு, போக வர பெட்ரோல் செலவு, இலவசமா வாந்தி வேர வரும். அதுக்கு இந்த டாக்டர் கொடுக்கர மருந்தே தேவலாம்ல.

இவ்வாறாக நண்பன் கமலக் கண்ணன் தன் உடம்பை சரி செய்து கொள்வார். கூடவே அவரின் ட்ரேட் மார்க், சேட்ஜியின் கைவண்ணத்தில் உருவான அற்ப்புத மருந்து, ‘மாவா’ வும் சேர்ந்து கொள்ள, விரைவாக குணம் அடைவார்.

வழக்கம் போல் ஒரு முறை அவருக்கு போதை தேவைப் பட்டது (அதாங்க அவருக்கு உடம்பு சரி இல்லாமப் போச்சு). எப்போதும் கமல் ஆஸ்பத்திரி செல்லும் போது துணைக்கு ஒருத்தர் வேண்டும் என்பதால், அன்று மாலை எனக்கு போன் செய்தார். நான் ஆபீசில் இருந்து வீட்டிற்க்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். திரு-வி-க நகர் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆஸ்பத்திரி 5 நிமிட தூரம் தான். நான் ஆஸ்பத்திரி சென்றதும் கமல் புற நோயாளி பகுதியில் அமர்ந்து இருந்தான்.

“எத்தனாவது ஆள் டா நீ” னு கேட்டேன், “இன்னும் மூனு பேர் இருக்காங்க டா” னு சொன்னான். எனக்கு நல்ல பசி வேற. நான் இதை அவனிடம் சொல்ல, உடனே அவனோட பஜாஜ் டிஸ்கவர் சாவிய என் கிட்ட கொடுத்து “வீட்டுக்கு போய் சாப்பிட்டு வந்து என்ன கூட்டிட்டு போ” என்றான்.

நான், “டேய் மூனு பேருக்கு அப்புறம் நீ போகனும்கரே, நான் சாப்பிட்டு வர லேட் ஆகிரும் டா” னு சொன்னேன். அதுக்கு “வெளிய போய் பேசலாம் வாடா” னு என்னைக் கூட்டிட்டு போய்,
“டே இந்த டாக்டர் ஒவ்வொருத்தருக்கும் பிரச்சனை என்னனு கேட்டு, கூகிள்ல மருந்து தேடி கண்டுபுடிச்சி கொடுக்க கண்டிப்பா லேட் ஆகும் டா, நீ போய் சாப்பிட்டு வாடா” னு சொன்னான். எனக்கு குபீர்னு சிரிப்பு வந்திருச்சு.

யோசிச்சுப் பாருங்க, டாக்டர் யாரோ ஒருத்தர் கிட்ட என்ன பிரச்சனைப்பா அப்படினு கேட்க்க, அவர் “எனக்கு cold டாக்டர்” னு சொல்ல, டாக்டர் உடனே மறச்சு வச்சிருக்கர மடிக் கணினியிய யூஸ் பண்ணி “medicines for cold” அப்படினு கூகிள்லே டைப் பண்ணி, மருந்து தேடுவாரா??. இதை நான் கமல் கிட்ட சொல்ல, ரெண்டு பெரும் ஆஸ்பத்திரி வாசல்ல நின்னு சிரிச்சிகிட்டு இருந்தோம் ……

மேலும் அந்தத் தவறான சிகிச்சையால் இறந்து போனவரின் வயதான பெற்றோர் என் வீட்டுக்கு பக்கத்து ப்ளாட்டில் தான் வசிக்கிறார்கள் என்பது இந்த தீபாவளி அன்று தான் தெரிய வந்தது. தீபாவளிப் பலகாரங்கள் கொடுக்க எங்கம்மா அவர்கள் வீட்டிற்க்கு சென்றதனால், இந்த விஷயம் எனக்குத் தெரிய வந்தது.

கொசுரு::
இந்தப் பதிவை எந்த டாக்டராவது படிக்க நேர்ந்தாலோ, அல்லது வேறு சிலர் படிக்க நேர்ந்து (தெரியாத்தனமாக), அவர்கள் மனம் புண்படுமானால், நாட்டு மருந்துக் கடைக்குச் சென்று களிம்பு வாங்கி புண்பட்ட இடத்தில் தடவிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரசிகன் …

முட்டாள்தனமான ரசிகன் இருக்கும் வரை நடிகர்கள் நடித்துக்கொண்டே தான் இருப்பார்கள், எந்த வித கிறுக்குத்தனமான கதாபாத்திரத்திலும்..

ஒரு சுவையான(??) சம்பவம் ..

இளைய தளபதி நடித்து ஓரளவு (???) ஓடிய படம் “ஆதி”. அந்த படம் ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில், நான் என்னுடைய நண்பனை சந்திக்க வேண்டி இருந்தது.. அவன் விஜய் ரசிகன். அவனை சும்மா கலாய்க்க நானும் என்னுடைய இன்னொரு நண்பனும் சேர்ந்து அவனிடம் ஆதி படத்தை பற்றி கிண்டல் பண்ணிக்கொண்டு இருந்தோம்.

அவனும் என்ன என்னவோ சொல்லி சமாளித்து பார்த்தும், அவனால் முடியவில்லை. ஒரு 5 நிமிடம் இருக்கும் நங்கள் அவனை ஓட்ட ஆரம்பித்து.

இந்த சம்பவம் நடந்த இடம் சத்யம் தியேட்டர்க்கு அருகில் உள்ள ஒரு தம் கடையில். இப்படி நாங்கள் மூன்று பெரும் தம் அடித்து கொண்டும், நண்பனை கலாய்த்து கொண்டும், சிரித்து கொண்டும் இருந்தோம். திடீர் என்று ஒருவன் எங்களை நோக்கி வந்து, “ஹலோ, தலைவர் எப்பிடி நடிச்சிருக்கார் தெரயுமா??? படம் எவ்ளோ சூப்பரா இருக்கு தெர்யுமா??? சும்மா படம் பார்க்காம பேசாதீங்க…” என்று சொன்னான்..

எங்கே இருந்து அவன் வந்தான் என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்திருக்க வேண்டும் என்று நினைகிறேன்.

நானும் என்னுடைய இன்னொரு நண்பனும் வாயாடைத்து போய் நின்றோம். அந்த நபர் சத்யம் தியேட்டர் எதிரில் மீன்பாடி வண்டி வைத்து தனது அன்றாட பிழைப்பை பார்த்து கொண்டிருப்பவர் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது.

அவர் உடை பின் வருமாறு : ஒரு கருப்பு கலர் ரவுண்டு நெக் t-ஷர்ட். முன்னும் பின்னும் விஜய் படம் பிரிண்ட் செய்ய பட்டுறிந்தது, தொடை தெரிய தூக்கி காட்டிய, ஒரு பழைய கைலி (டப்பா கட்டு என்று நினைகிறேன்).

நானும் எவ்வளவோ கேள்வி பட்டு இருக்கிறேன், பைத்தியக்கார ரசிகர்கள் இருப்பார்கள் என்று. ஆனால் இவ்வளவு பைத்தியமான ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று அப்பொழுது தான் நேரில் கண்டேன்..

இந்த சம்பவத்தை எனது இன்னொரு நண்பன் சபரி இடம் “எவ்வளவு பைத்தியக்கார ரசிகன்டா அவன்..” என்று சொல்லும் போது அவன் கேட்டான், “அந்த ஆள் என்னடா வேலை பார்க்கிறான்??”.

நான் சொன்னேன், “அவன் மீன்பாடி வண்டி ஓட்டறான்”. அதற்க்கு சபரி சொன்னான், “அதுனால தான் அவன் இன்னும் மீன்பாடி வண்டி ஓட்டறான்..” என்று.

உண்மை தான் என்று தோன்றியது எனக்கு.

Job insecurity

தற்போது ஆபீசில் வேலை இல்லாததால் இந்த பதிவு. தற்சமயம் வேலை சுத்தமாக இல்லை என்று சொல்வது தான் உசிதம். இது கூட ஒரு வகையில் பயத்தை தான் உண்டு பண்ணுகிறது. ஒருவேளை எல்லா சாப்ட்வேர் ஆசாமிகளுக்கும் இப்படி தான் இருக்குமோ, வேலை இல்லாமல் ஆபீசில் இருந்தால்??.. அப்பா மிகவும் கஷ்டமாக தான் உள்ளது. மறுபடியும் வேலை வருமா?? அல்லது வேலையை விட்டே போக சொல்வார்களா??, எதுவுமே புரியவில்லை இப்பொழுது.

பொதுவாகவே “job insecurity” வந்து விட்டால் ரொம்ப கஷ்டம். நினைக்க நினைக்க நிச்சயமாக tension ஏறும். நல்லவேளை எனக்கு கல்யாணம் ஆகவில்லை. கல்யாணம் ஆனவர்களின் பாடு திண்டாட்டம் தான். வேலையை தக்க வைக்க அவர்கள் பெருமுயற்சி எடுக்க வேண்டியதாக இருக்கும். அந்த சமயத்தில் அவர்களிடத்தில் ஒரு இனம் புரியாத பயம், எங்கே வேலை பொய் விடுமோ என்று தோன்றும். இதை வீட்டில் மனைவியிடம் சொல்லவும் முடியாமல், யாரிடமும் விவாதிக்கவும் முடியாமல் திணறி, பிள்ளைகளிடம் சரியாக பேச முடியாமல், வீட்டில் ஒட்டாமல், இந்த கடுப்பை வீட்டில் இருபவர்களிடம் காட்டி கொண்டு தான் காலத்தை ஓட்டுவார்கள்.

நான் வேலை பார்த்த ‘project’ முடிந்து, இப்பொழுது வேறு ப்ராஜெக்ட் எதுவும் இல்லாமல் சும்மா உக்கார்ந்திருப்பது என்பது மிகவும் கொடுமை. அதுவும் அடுத்த ப்ராஜெக்ட் ஆனது நமக்கு சுத்தமாக பரிச்சியம் இல்லாத ஒரு வேலையாக இருந்தால் மிக கஷ்டம். software கம்பெனி ஆசாமிகளை பொறுத்த வரை, adaptability, flexibility தான் முக்கியம் ..

என்னுடைய இடத்தில வேறு எதாவது கல்யாணம் ஆனா ஒருவரை நினைத்து பார்த்தல், அப்பப்பா “என்ன கொடும sir இது”???..
வேலை இல்லாத சமயம், காலை 9.00 மணிக்கு வந்து உக்கார்ந்து, mails செக் பண்ணி விட்டு, அடுத்து என்ன செய்வது என்பதே தெரியாமல் இந்த மாதிரி ப்ளாக் அப்டேட் பண்ணிக்கொண்டு இருப்பது தான், செய்யும் ஒரே வேலை. (அடிமனதில் ஒரு பயம் கவ்வுகிறது ..”job insecurity”). ஆனால் ஒன்று இவ்வாறாக பயத்தை பதிவு செய்தாலும், ஒரு ஆன்மீகத்தனமான சிந்தனை ஒன்று தான் மேலெழும்புகிறது…

வரும் போது எந்த முதலீடும் இல்லாமல் வெறும் கையை வீசிக்கொண்டு தான் வந்தேன், அப்புறம் என்ன பயம்… எது நடந்தாலும் அது எனக்கு லாபம் தான்..
இது கல்யாணம் ஆனவர்களுக்கு பொருந்துமா?? என்று தான் தெரியவில்லை.

” One who does not really needs any security they are the ones who are really secured …”

எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தும் எதாவது கற்றுக்கொள்ள முடியுமா என்று பார்ப்பது தான் எனது இப்போதைய வேலை.

கற்று கொண்டது …
புதியதாக ப்ளாக் ஆரம்பிச்சு அதில் என்னுடைய பதிவுகளை பதிய கற்று கொண்டேன்.

கொசுறு ::

ரணகளதுலயும் ஒரு சந்தோஷம், வீட்டுக்கு சீக்கிரமா 7.45 மணிக்கெல்லாம் போக முடியுது !!!!….