கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Monthly Archives: December 2010

ஹீரோ சீன்…

இந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது..

வீடு மாற்றி மறுபடியும் திரு-வி-க நகர் வந்து இருந்தோம். பல் தேய்க்கும் பிரஷ் வைக்க ஒரு பிளாஸ்டிக் ஸ்டான்ட் வாங்க வேண்டி இருந்தது..

2nd saturday லீவில், அண்ணா நகர் 3rd அவின்யு வில் சுற்றி கொண்டு இருந்தேன். அது என்னவோ தெரியல, அண்ணா நகர் எனக்கு ரொம்பவும் புடிச்ச ஏரியா.

அதுவும் கோல்டன் பிளாட்ஸ் வீட்டில் இருந்து, திருமங்கலத்தை தாண்டி, அண்ணா நகர் ஏரியாவுக்குள் நுழையும் போது, சான்சே இல்லை, ரொம்ப நல்லா இருக்கும்.. ஜோடியாக நடந்து போக ரொம்ப நல்ல ஏரியா. ஆனால் தனியாக நடந்து போவது என்பது ஆனந்தம். மேலும் இந்த ரோட்டில் தான் லவ் குருவிகளை அதிகம் காண முடியும். அதிகமாக டிராபிக் இல்லாத ரோடு அது. திருமங்கலத்துக்கு parallel ரோடு.

கவனிக்க::
அந்த ரோடு, அண்ணா நகர் டவர் பார்க் செல்லும் ரோடு..

அந்த ரோட்டின் கடைசியில், எனது ஆபீஸ் உள்ளது..

முன்னுரை முடிந்தது…

சரி… இப்பொழுது matterku வருவோம் …

பிரஷ் வைக்கும் ஸ்டான்ட் வாங்க எங்கெங்கோ சுற்றி, கடைசியில், ஒரு சின்ன கடையை பிடித்தேன். அந்த கடையில் ஒரு வழியாக ஸ்டாண்டை வாங்கி விட்டு பைக் park செய்திருந்த இடத்திற்கு வந்தேன்.

பைக் ஸ்டார்ட் செய்யும் போது, அருகில் நின்றின்ருந்த இரண்டு ஆட்களில் (இருவரும் 20 வயது நிரம்பிய பைய்யன்கள்) ஒருவன் என்னிடம் வந்து, “அண்ணா ஓனர் வண்டிய யாரோ ஒருத்தன் ஸ்டார்ட் பண்ணி ஓட்டிட்டு போறான். பைக் சாவி என் கிட்ட இருக்கு. ஓனர் வேற இல்ல, அவன புடிக்கணும்” னு சொன்னான்.

நானும் “சரி ஒக்காரு” னு சொல்லி, ரொம்ப வேகமா வண்டிய ஓட்டிட்டு போனேன். வண்டி ஓட்டும் போதே, மனசுக்குள்ள எதோ பயங்கரமான சேசிங் இது என்று நினைத்து, எப்புடியும் பைக் திருடுனவன புடிச்சு நாலு ஒத ஓதைக்கணும் னு நெனைச்சிட்டே வண்டிய ரொம்ப வேகமா, எதிர்லே வந்த கார கட் பண்ணி, அந்த கேவலமான ரோட்லே ஓட்னேன். (அந்த ரோட்லே இப்போதான் ட்ரைன்ஏஜ் connectionkaga தோண்டி போட்டு, மன்ன வச்சு மூடி வச்சிருந்தாங்க).

ஒரு வழியா அந்த ஆள சிக்னல் லே புடிச்சாச்சு. பின்னாடி ஒக்கார்ந்திருந்த அந்த பைய்யன் கீழ இறங்கி “ஹலோ, இந்த பைக் எங்க ஓனரோடது, பைக்க கொடுங்க” என்று சொன்னான். அதுக்குள்ள நான், இன்னைக்கு செம சண்ட இருக்கு இந்த ஆள் கிட்ட நாம ஹீரோ ஆகிடலானு நெனச்சேன்.

அந்த ஆள் 2 செகண்ட் நிதானமா என் கூட வந்த அந்த பைய்யன பார்த்து “தம்பி, உங்க ஓனர பைக் due கட்டிட்டு வண்டிய வாங்கிட்டு போக சொல்லு” னு சொன்னாரு. சொல்லி 5 செகண்ட்லே சிக்னல் விழுந்துது, அந்த ஆசாமி கெளம்பி போனாரு, அந்த பைய்யன் கீழ ஏறங்கீடான், நானும் என்னோட மண்ணு விழுந்த ஹீரோ கனவோட, சைலெண்டா வண்டிய திருப்பிட்டு வந்துட்டேன்.

கொசுறு::
நானும் எப்படியாவது ஹீரோ சீன் போட்ரலானு பாக்கறேன்… ம்ஹூம்….

இந்த நிகழ்ச்சி என் கல்லூரி காலத்தில் நடந்தது ….

இந்த நிகழ்ச்சி என் கல்லூரி காலத்தில் நடந்தது ….

அப்பொழுது இன்ஜினியரிங் first இயர் …

விக்ரம் என்று ஒரு நண்பன்.. (இந்த பதிவிற்கு காரணமே அவன் தான்).. கண்மணி ராஜா என்று ஒரு chemistry வாத்தியார் .. அவருக்கும் இவனை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் எண்டு ஆசை ..

பய்யன் ஒன்னும் அவ்ளோ சூப்பரா படிப்பானு நெனைக்க வேணாம் .. சும்மா அவன கலாய்க்கணும்னு ஆசை …

சும்மா lunch சாப்டுட்டு நடந்து போனவன கூபிட்டு , “டேய் விக்ரம், உனக்கு இந்த கம்ப்யூட்டர் பத்தி என்னடா தெரியும்” nu கேட்ருகார் … ஏதோ டாகுமெண்ட type பண்ணிட்டே…

அவனும் உடனே “சார் , இந்த ஸ்விட்ச அமுக்கினா சிஸ்டம் off ஆகிரும்” சொல்லிட்டே பவர் ஸ்விட்ச அமுக்கி ஆப் பண்ணிட்டான் … வந்திச்சு பாரு கண்மணி ராஜாவுக்கு கோபம் …

அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் … 🙂

மொக்கை – 3 …

எனது real life காமெடி

மே மாதம் 2009 நாடாளுமன்ற தேர்தல் …

இடம் :: திரு-வி-க நகர் சமுதாய கூடம்

பயங்கர கூட்டம், காலை 8.30 மணிக்கு… (ரொம்ப சீக்கிரமோ) office ku லீவ் போட்டு, லைன்ல நின்னா, நின்னதுக்கு அப்புறோம் தான் தெரிஞ்சிது என் பேரு list le இல்ல …

ஓடு, கரை வேட்டி போட்ட தெரிஞ்ச ஆளு ஒருத்தர பார்த்து என் பேரு லிஸ்ட் லே இருக்கானு கேட்டேன் .. தேடி பார்த்து இல்லன்னு சொன்னாரு …

ok now confirmed, என் பேரு லிஸ்ட் லே இல்ல , ஆனா ஆபீசுக்கு லீவ் போட்டு வந்துருக்கேன் .. என்ன பண்ண ?? ..

ok சமாளிப்போம்னு சமுதாய கூடதுகே போனேன் ..

ஒரு மணி நேரம் லைன் லே நின்னேன் .. வோட்டு போடற ரூமுக்குள்ளே போனேன் .. என் பேரு இல்லன்னு சொன்னங்க (அது எனக்கே நல்லா தெரயுமே..) உடனே shocking reaction கொடுத்தேன் ..

“நல்லா தேடி பாருங்க” சார்னு சொன்னேன் .. அவங்களும் தேடி பார்த்துட்டு “உன் பேரு இல்லபா , நீ வோட்டு போடா முடியாதுன்னு” சொன்னங்க..

நான் உடனே அந்த ரூம் incharge கிட்ட போய், “சார் .. நான் இன்னைக்கு ஆபீசுக்கு லீவ் போட்டு வந்துட்டேன்னு சொன்னேன் “. அவரும் “நான் என்ன சார் பண்ணுவேன் உங்க பேரு லிஸ்ட்லே இல்ல.. லிஸ்ட் எடுக்கும் போது நீங்க வீட்லே இல்லையா ?? ” ன்னு கேட்டார் … நானும் “ஆமா சார் ” ன்னு சொன்னேன் …

டக்குனு யோசிக்கிறே மாதிரி யோசிச்சி “எனக்கு மை மட்டும் வச்சு உடுங்க சார் ன்னு சொன்னேன்” (இது என் பேர் லிஸ்ட் லே இல்லன்னு தெரிஞ்ச உடனே, நான் போட்ட பிளான் தான்..)

அவரு ஒரு நிமிஷம் என்ன பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சாரு .. (பப்பி shame தான், இருந்தாலும் என்ன பண்ண)..

உடனே மை வைக்ரவர பார்த்து “சார் .. இவரு ஆபீசுக்கு லீவ் போட்டுட்டு வந்துட்டாராம் .. அதுனாலே கொஞ்சம் மை மட்டும் வச்சிடுங்க” ன்னு சிரிசிட்டே சொன்னாரு … அவ்ளோ தான் அங்கே இருந்த அத்தனை பேரு மூஞ்சிலயும் ஒரே சிரிப்பு … ஹி ஹி ஹி ன்னு சிரிசிட்டே நானும் மைய வெரல தேய்ச்சிட்டு வந்துட்டேன் …

என்ன பண்ண நம்ம எங்க போனாலும், என்ன பண்ணாலும் காமெடி தான் … ஆனா பாருங்க அந்த ரூம் incharge அவரு வாழ்க்கைலே இந்த மாதிரி ஒரு மொக்கைய பார்திருக்கே மாட்டாரு … அங்க இருந்த எல்லாரும் தான் … 🙂