கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Tag Archives: takeshi kitano

கிகுஜிரோ பிண்ணனி இசை …

கிகுஜிரோ படத்தின் பிண்ணனி இசையை பதிவிறக்கம் செய்ய, இந்த வெப் சைட் செல்லவும் (http://downloads.khinsider.com/game-soundtracks/album/kikujiro-no-natsu). பின்பு படத்தில் காட்டியிருப்பதை போன்று பேஜ் இருப்பதை பார்க்கலாம்.

கீழே இருக்கும் படம்-1 சரியாகத் தெரியவில்லை என்று நினைக்கும் வயதானவர்கள், படத்தைக் க்ளிக்கிப் பெரிதுபடுத்திப் பார்க்கவும்.

எப்படி டௌன் லோடு செய்வது என்பதை இங்கு விளக்கி (???) உள்ளேன்.

மௌசை பாடல்கள் லிஸ்ட் மேல் வைத்து கிளிக் செய்யவும். கிளிக்கியவுடன் வேறு தளத்திற்கு செல்வீர்கள். அங்கு பாடலை டௌன் லோடு செய்ய இரண்டு ஆப்சன் இருக்கும் –> Download to Phone | Download to Computer.

இரண்டாவது ஆப்சனில் (Download to Computer) ரைட் கிளிக் செய்து, “save link as” என்ற ஆப்சனை கிளிக் செய்து உங்கள் கணிப்பொறியில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பார்க்க படம்-2 கீழே …

கொசுறு::

பிண்ணனி இசையினைக் கேட்க்க உகந்த நேரமாக அமைதியான ஒரு இரவுப் பொழுதையோ அல்லது அமைதியான அதிகாலை நேரத்தையோ தேர்ந்தெடுக்கத் தேவையில்லை.

எந்த நேரத்திலும் கேட்டு இன்புறலாம் ….

—– ஜெய் “ஜோ ஹிஷாய்ஷி” —–

Advertisements

கிகுஜிரோ….

இது விமர்சனம் அல்ல … நான் ரசித்ததை இங்கு பதிந்து இருக்கிறேன்…

நந்தலாலா = கிகுஜிரோ என்று பேச்சுகள் எழ ஆரம்பித்ததால் கிகுஜிரோ பார்க்க நேர்ந்தது. கிகுஜிரோவும் நல்ல பீல் குட் பிலிம் தான். ஆனால் வேறு ஜெனெரியில் பயணம் ஆகும் படம். கிகுஜிரோ, தாயைத் தேடி செல்லும் ஒரு சிறுவனும் அவனுடன் பயணிக்கும் ‘மிஸ்டரைப்’ பற்றிய படம். பின்னணி இசை அற்ப்புதமாக இருக்கும். கண்டிப்பாக அனைவரும் பின்னணி இசைக்காக இந்தப்படத்தை பார்க்க வேண்டும். இந்தப்பயணத்தில் அவர்கள் சந்திக்கும் நபர்கள் அனைவரும் ‘மிஸ்டருடன்’ சேர்ந்து அந்தப்பைய்யனை சந்தோஷமாக பார்த்துக்கொள்கிறார்கள். இது தான் கிகுஜிரோ படம்.

ஏன் ‘மிஸ்டர்’ சிறுவனை குஷிப்படுத்துகிறார் என்பதை நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை கிகுஜிரோ கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். குறிப்பாக இந்தப் படத்தில் சிறுவனின் ஈடுபாட்டைப் பார்த்து பிரமித்து போய் விட்டேன். “நடிப்பு” என்று சொன்னால் அது அந்த நடிகர்களை அசிங்கப்படுத்துவதாக போய் விடும். நிச்சயமாக நடிகர்கள் தெரியவே மாட்டர்கள் கிகுஜிரோ படத்தில்.

எப்போது ‘மிஸ்டரின்’ பெயர் படம் பார்ப்பவர்களுக்கு தெரிய வரும் என்பதையும் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அப்புறமாக பின்னணி இசை… இந்தப் படத்தைப் பார்த்தவுடன் “ஜோ ஹிஷாய்ஷி” (இசைஅமைப்பாளர்) யின் தீவிர காற்றாடி (fan) ஆகி விட்டேன். பின்னணி இசை அவ்வளவு அற்ப்புதமாக இருக்கும். நந்தலாலாவின் இசையை கேட்டால் ஒரு மெல்லிய சோகத்துடனும், மனதை லேசாக்குவதாகவும், அதே வேளையில் நம்மை நெகிழ்ச்சி அடைய வைப்பதாகவும் இருக்கும். சில இடங்களில் கண்ணீரை வரவழைப்பதாகவும் இருக்கும். ஆனால் கிகுஜிரோ இசை ஒரு மென்சோகத்துடன் ஆரம்பித்து மனதை குஷிப்படுத்துவது போல் இருக்கும். ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ‘refreshing’ ஆக இருக்கும்.

இந்தப் படத்தின் இசையும் நம்மை நெகிழச் செய்யும். கிகுஜிரோ என்னும் டைட்டில் போடும் இடத்தில் வரும் இசை கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். அந்த சிறுவனின் மனநிலையை பிரதிபலிப்பது போல் இருக்கும். தற்சமயம் கிகுஜிரோ படத்தின் இசையைத் தரவிறக்கி என்னுடைய ஐ-பாட், கணினி, 28 எம்.பி மெமரி கைபேசி, இவற்றில் பதிந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

இசையைப் பற்றி சொல்ல வேண்டியது நிறய இருக்கிறது, ஆனால் வார்த்தைகள் மிகவும் கொஞ்சமாக இருக்கும் காரணத்தால் நீங்களே இசையை உணர்ந்து அனுபவித்துக் கொள்ளுங்கள்.

கிகுஜிரோ படம் பார்த்தவுடன் ஒரு விஷயம் புரிந்தது, நிச்சயம் இந்த உலகத்தில் எந்த ஒரு பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் மற்றவரை சந்தோஷமாக பார்த்துக் கொள்வதர்க்கு நிறய “மனிதர்கள்” இருக்கிறார்கள். படம் பார்த்தபின் அந்தத் தாக்கம் நமக்குள் நிச்சயம் இருக்கும். அந்த சிறுவன் சந்தோஷமடைவதைப் பார்க்கும் போது, நாமும் சந்தோஷமடைவோம். மற்றபடி படம் மெதுவாகத்தான் செல்லும்.

நண்பர்களே, இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பாருங்கள்.

கொசுறு::

படத்தின் தரவிறக்கச் சுட்டி,

http://fenopy.com/torrent/kikujiro+no+natsu+1999+480p+h264+req+/NjE3ODI3OQ

இசையை அனுபவிக்க வேண்டும் என்றால், கூகிளில் “kikujiro music free download” என்று தேடுங்கள். முதல் மூன்று அல்லது நான்காவது ‘வெப் சைட்டிலே’ உங்களுக்கு கிடைக்கும்.

—– ஜெய் “ஜோ ஹிஷாய்ஷி” —–