கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Tag Archives: charu nivethitha

சாருவிற்கு

ஹாய் சாரு,

நான் உங்கள் ரசிகன். என்னவோ தெரியவில்லை உங்களிடம் அப்படி ஒரு ஈர்ப்பு. உங்களிடம் எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்பதால் தான் இந்த விளக்கம். ‘just be open minded and read…’

*** புத்தன் சொன்னான், துன்பத்தின் காரணம் ஆசை என்று. ஜக்கியோ எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்கிறார். அவர் அப்படிச் சொல்வதுதான் நமக்குப் பிடித்திருக்கிறது ***

புத்தன் சொல்வதாக சொல்லப்படுவது, “ஆசை தான் துன்பத்திற்கு காரணம், அதனால் ஆசைப்படுவதை விடுங்கள்”.. ஆனால் சிறிது ஆழமாக யோசித்து பார்த்தால், ஆசைப்படுவதை விட்டுஒழிப்பது என்பதே மிக பெரிய ஆசை தான்.. இது என்னை போன்ற சாமானியனால் சிந்திக்க முடிந்தது. மிக பெரிய எழுத்தாளர் உங்களுக்கு புரியாதது ஆச்சர்யமாக இருக்கிறது.

*** நமக்குப் பிடித்ததையே அவர் சொல்கிறார். இது ஒரு பரஸ்பர முதுகு சொறியும் வேலை***

ஜக்கியால் நடத்தப்படும் யோக வகுப்புகளுக்கு சென்றால் தான் தெரியும், அவர்கள் நமக்கு பிடித்ததை (முதுகு சொரிவது) சொல்கிறார்களா அல்லது, நாம் இது வரை நினைத்து கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் உடைக்கிரார்களா என்று.

*** இங்கே என்னுடைய கேள்வி என்னவென்றால், ஜக்கி விதவிதமாக உடுத்துகிறார். ஆனால் தன்னுடைய சீடர்கள் மட்டும் வெள்ளை அங்கியே அணிய வேண்டும் என்கிறார். ஏன் அப்படி என்று புரியவில்லை ***

அவர்கள் எப்பொழுதும் வெள்ளை நிற ஆடை அணிவதில்லை . இடத்திற்கு தகுந்தார் போல் தான் உடை உடுத்துகிறார்கள். அவர்கள் விளையாடும் போது (volley ball, etc) jeans, t-shirt கூட அணிகிறார்கள் . உங்கள் கவனிக்கும் திறன் அதிகரிக்க வேண்டும்.

*** ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த அவர் இப்போது ஜக்கியிடம் ஐக்கியம். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே புரியவில்லை ***

புரியாத விஷயத்தைப்பற்றி பொதுவாக யாரும் பேசுவதில்லை

*** ஒருமுறை ஜக்கியின் ஆசிரமம் சென்றிருந்தேன். அழகழகான இளம் பெண்கள் என்னை அணுகி என்னை மூளைச் சலவை செய்யும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தனர். ஒரு பெண் உண்டியலைக் கொண்டு வந்து மூக்குக்கு முன்னால் நீட்டினார் ***

இது முற்றிலும் பொய் . நானும் சென்று இருக்கிறேன் . யாரும் அவ்வாறு மூளைச் சலவை போன்ற அபத்தங்களை செய்வதில்லை . தினமும் ‘tourists’ நிறைய பேர் வருகிறார்கள் . ஆனால் யாரிடமும் அவ்வாறு மூளைச் சலவை நடந்ததில்லை. உண்டியலைக் கொண்டு வந்து யாரும் நீட்டுவதில்லை . ஆனால் உண்டியல் இருக்கிறது , விருப்பம் இருப்பவர்கள் காசு போடுகிறார்கள் . யாரும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. கவனிக்க: உங்கள் ‘website’ லும் உண்டியல் உள்ளது

*** ஜக்கியிடம் உள்ள இன்னொரு பிரச்சினை, இந்து மதத்தை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது. அப்படியானால் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் ஆகியோர் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் இல்லையா? ***

நீங்கள் அவர் பேசுவதை முழுவதுமாக கேட்கவில்லை என்று தோன்றுகிறது . (கடவுளால் படைக்கப்பட்டவர்கள்)மனிதனுக்கு வந்த முதல் பகுத்தறிவு , கலவியில் ஈடுபட்டால் குழந்தை பிறக்கும் என்பது தான் (மதன் சொன்னது ). ஒரு தலை சிறந்த எழுத்தாளராக இருந்தும் இந்த சிறிய மற்றும் சீரிய விஷயத்தை கவனிக்க தவறி விட்டீர்கள்

*** இன்று நான் கருணாநிதியை, சோனியா காந்தியை, மன்மோகன் சிங்கை என்று யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதனால் எனக்குப் பாதகம் ஏற்படாது. ஆனால் ஜக்கியை விமர்சித்தால் என் எழுத்தே காலி ***

சிரிப்பு தான் வருகிறது , அப்படி அவரை விமர்சிக்கும் பத்து பேரில் நீங்களும் ஒருவர் . அவ்வளவே!!!

***ஆனால் இவ்வளவுக்குப் பிறகும் அவருடைய வழிகாட்டுதலில் ஒருமுறை கைலாஷை தரிசிக்க வேண்டும் போல் இருக்கிறது***

நன்று… செயல்படுத்தவும்

==========================================================================================

ஒரு தனிப்பட்ட ஆளையோ அல்லது ஒரு குழுவையோ சீர்தூக்கி பார்த்து தான் நாம் அதில் இணைய வேண்டும் ஆன்மீகத்தை பொறுத்த வரை . ஏனென்றால் மருத்துவரிடமும் ஆன்மீகவாதி இடமும் தான் மக்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள் – சொன்னவர் ஜக்கி தான்