கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Tag Archives: kikujiro

கிகுஜிரோ பிண்ணனி இசை …

கிகுஜிரோ படத்தின் பிண்ணனி இசையை பதிவிறக்கம் செய்ய, இந்த வெப் சைட் செல்லவும் (http://downloads.khinsider.com/game-soundtracks/album/kikujiro-no-natsu). பின்பு படத்தில் காட்டியிருப்பதை போன்று பேஜ் இருப்பதை பார்க்கலாம்.

கீழே இருக்கும் படம்-1 சரியாகத் தெரியவில்லை என்று நினைக்கும் வயதானவர்கள், படத்தைக் க்ளிக்கிப் பெரிதுபடுத்திப் பார்க்கவும்.

எப்படி டௌன் லோடு செய்வது என்பதை இங்கு விளக்கி (???) உள்ளேன்.

மௌசை பாடல்கள் லிஸ்ட் மேல் வைத்து கிளிக் செய்யவும். கிளிக்கியவுடன் வேறு தளத்திற்கு செல்வீர்கள். அங்கு பாடலை டௌன் லோடு செய்ய இரண்டு ஆப்சன் இருக்கும் –> Download to Phone | Download to Computer.

இரண்டாவது ஆப்சனில் (Download to Computer) ரைட் கிளிக் செய்து, “save link as” என்ற ஆப்சனை கிளிக் செய்து உங்கள் கணிப்பொறியில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பார்க்க படம்-2 கீழே …

கொசுறு::

பிண்ணனி இசையினைக் கேட்க்க உகந்த நேரமாக அமைதியான ஒரு இரவுப் பொழுதையோ அல்லது அமைதியான அதிகாலை நேரத்தையோ தேர்ந்தெடுக்கத் தேவையில்லை.

எந்த நேரத்திலும் கேட்டு இன்புறலாம் ….

—– ஜெய் “ஜோ ஹிஷாய்ஷி” —–

Advertisements

கிகுஜிரோ….

இது விமர்சனம் அல்ல … நான் ரசித்ததை இங்கு பதிந்து இருக்கிறேன்…

நந்தலாலா = கிகுஜிரோ என்று பேச்சுகள் எழ ஆரம்பித்ததால் கிகுஜிரோ பார்க்க நேர்ந்தது. கிகுஜிரோவும் நல்ல பீல் குட் பிலிம் தான். ஆனால் வேறு ஜெனெரியில் பயணம் ஆகும் படம். கிகுஜிரோ, தாயைத் தேடி செல்லும் ஒரு சிறுவனும் அவனுடன் பயணிக்கும் ‘மிஸ்டரைப்’ பற்றிய படம். பின்னணி இசை அற்ப்புதமாக இருக்கும். கண்டிப்பாக அனைவரும் பின்னணி இசைக்காக இந்தப்படத்தை பார்க்க வேண்டும். இந்தப்பயணத்தில் அவர்கள் சந்திக்கும் நபர்கள் அனைவரும் ‘மிஸ்டருடன்’ சேர்ந்து அந்தப்பைய்யனை சந்தோஷமாக பார்த்துக்கொள்கிறார்கள். இது தான் கிகுஜிரோ படம்.

ஏன் ‘மிஸ்டர்’ சிறுவனை குஷிப்படுத்துகிறார் என்பதை நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை கிகுஜிரோ கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். குறிப்பாக இந்தப் படத்தில் சிறுவனின் ஈடுபாட்டைப் பார்த்து பிரமித்து போய் விட்டேன். “நடிப்பு” என்று சொன்னால் அது அந்த நடிகர்களை அசிங்கப்படுத்துவதாக போய் விடும். நிச்சயமாக நடிகர்கள் தெரியவே மாட்டர்கள் கிகுஜிரோ படத்தில்.

எப்போது ‘மிஸ்டரின்’ பெயர் படம் பார்ப்பவர்களுக்கு தெரிய வரும் என்பதையும் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அப்புறமாக பின்னணி இசை… இந்தப் படத்தைப் பார்த்தவுடன் “ஜோ ஹிஷாய்ஷி” (இசைஅமைப்பாளர்) யின் தீவிர காற்றாடி (fan) ஆகி விட்டேன். பின்னணி இசை அவ்வளவு அற்ப்புதமாக இருக்கும். நந்தலாலாவின் இசையை கேட்டால் ஒரு மெல்லிய சோகத்துடனும், மனதை லேசாக்குவதாகவும், அதே வேளையில் நம்மை நெகிழ்ச்சி அடைய வைப்பதாகவும் இருக்கும். சில இடங்களில் கண்ணீரை வரவழைப்பதாகவும் இருக்கும். ஆனால் கிகுஜிரோ இசை ஒரு மென்சோகத்துடன் ஆரம்பித்து மனதை குஷிப்படுத்துவது போல் இருக்கும். ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ‘refreshing’ ஆக இருக்கும்.

இந்தப் படத்தின் இசையும் நம்மை நெகிழச் செய்யும். கிகுஜிரோ என்னும் டைட்டில் போடும் இடத்தில் வரும் இசை கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். அந்த சிறுவனின் மனநிலையை பிரதிபலிப்பது போல் இருக்கும். தற்சமயம் கிகுஜிரோ படத்தின் இசையைத் தரவிறக்கி என்னுடைய ஐ-பாட், கணினி, 28 எம்.பி மெமரி கைபேசி, இவற்றில் பதிந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

இசையைப் பற்றி சொல்ல வேண்டியது நிறய இருக்கிறது, ஆனால் வார்த்தைகள் மிகவும் கொஞ்சமாக இருக்கும் காரணத்தால் நீங்களே இசையை உணர்ந்து அனுபவித்துக் கொள்ளுங்கள்.

கிகுஜிரோ படம் பார்த்தவுடன் ஒரு விஷயம் புரிந்தது, நிச்சயம் இந்த உலகத்தில் எந்த ஒரு பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் மற்றவரை சந்தோஷமாக பார்த்துக் கொள்வதர்க்கு நிறய “மனிதர்கள்” இருக்கிறார்கள். படம் பார்த்தபின் அந்தத் தாக்கம் நமக்குள் நிச்சயம் இருக்கும். அந்த சிறுவன் சந்தோஷமடைவதைப் பார்க்கும் போது, நாமும் சந்தோஷமடைவோம். மற்றபடி படம் மெதுவாகத்தான் செல்லும்.

நண்பர்களே, இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பாருங்கள்.

கொசுறு::

படத்தின் தரவிறக்கச் சுட்டி,

http://fenopy.com/torrent/kikujiro+no+natsu+1999+480p+h264+req+/NjE3ODI3OQ

இசையை அனுபவிக்க வேண்டும் என்றால், கூகிளில் “kikujiro music free download” என்று தேடுங்கள். முதல் மூன்று அல்லது நான்காவது ‘வெப் சைட்டிலே’ உங்களுக்கு கிடைக்கும்.

—– ஜெய் “ஜோ ஹிஷாய்ஷி” —–

நந்தகிகுலாலாஜிரோ ….

ரொம்ப நல்ல படம். ஒரு பீல் குட் பிலிம். இளையராஜா ரொம்ப நல்லா (ரொம்ப வருஷம் கழிச்சு) இசை அமைத்து இருக்கிறார். டைரக்சன், ஒளிப்பதிவு ரெண்டிலயும் பிரமாதப்படுத்தி இருக்காங்க. அப்புறம் நடிப்பு, சொல்லவே வேணாம், இருந்தாலும் சொல்ரேன், அருமை என்னும் வார்த்தையை விட வேறு சில வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை.

இப்போ பிரச்சனை என்னன்னா, இந்த படம் ஜப்பான் படத்தை காப்பி அடித்து எடுத்தது என்பது தான்.

ஏதோ நாலு பேர் சில ‘ஒலக’ படம் எல்லாத்தையும் பாக்க வேண்டியது, அப்புறம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம்னு எந்த மொழி படத்தையும் விடுவது இல்ல அந்த படம் இந்த படத்தோட காப்பி இந்த படம் அந்த படத்தோட காப்பினு பதிவு எழுத வேண்டியது.

இவங்களுக்கெல்லாம் உண்மைலே என்ன பிரச்சனைனா, நான் ஒலக படம் பாக்கர ஆளு அப்படினு மறைமுகமாக எல்லோருக்கும் உணர்த்துவதையே ரொம்ப பெருமையான விஷயமா நெனைக்கும் கூட்டம். உங்களுக்கு இருக்கர மாதிரி வாய்ப்புகள் எல்லாருக்கும் இருப்பது இல்ல. அதனால உலகப்படம்னா என்னனே தெரியாத மற்றவர்களுக்கு இந்த படம் அற்ப்புதமான படைப்பு தான்.
இப்போ காப்பி அப்படீங்கர matter க்கு வருவோம். எங்க தான் ஸார் காப்பி இல்ல. இன்னும் சொல்லப்போனா இங்க பதிவுல இருக்கும் எல்லா தமிழ் வார்தைகளுமே ஒரு விதமான காப்பி தான். யாரோ ஒருவர் கண்டுபிடிச்ச சில தமிழ் வார்த்தைகள தான் இப்போ நாம எல்லோரும் யூஸ் பண்றோம். நமக்கு ஏத்த மாதிரி தமிழ் வார்த்தைகளை adapt செய்து யூஸ் பண்றோம். அப்போ நாம எல்லாரும் ‘காப்பி காட்கள்’ தானே.

சின்ன வயசுல உங்களுக்கு சொல்லிக்கொடுத்த தமிழ் வார்த்தைகள் தான் இங்க இருக்கு. இங்கே இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுமே நாம் படித்த புத்தகங்கள், பார்த்த படங்கள், நம்முடன் பேசியவர்களின் வார்த்தைகள், etc. இவற்றை தான் இங்கே ப்ளாக்கில் வார்த்தைகளாக மாற்றி பதிவு என்னும் பெயரில் இங்கே பதிந்திருக்கிறோம். நமக்கான வார்த்தைகள் அனைத்துமே ஏதோ ஒரு வகயில் மற்றவரிடம் (மற்றவர்களிடம்) இருந்து தான் பெறப்பட்டது.

மிஷ்க்கின் கலைஞர் டீவி யில் கொடுத்து இருந்த பேட்டியில், தகேஷியும், குரசாவவும் தன்னுடைய குரு என்று சொல்லி, நந்தலாலா கதையை சொல்லுவதற்க்கு தனக்கு ஒரு களம் தேவைப்பட்டது எனவும் அது கிகுஜிரோ படத்தில் இருந்தது என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். முடிந்தால் தகேஷியுடன் அமர்ந்து அவருக்கே நந்தலாலா படத்தை போட்டுக்காட்ட வேண்டும் என்ற தனது ஆசையை சொன்னார்.

இந்தப் படம் ஒரு adaptation தான். அதில் என்ன தவறு இருக்கிறது??. புத்திசாலித்தனமான adaptation. கிகுஜிரோ படத்தை பார்த்தவர்களிடம் கேட்டால் தெரியும், கிகுஜிரோவை ஒரு முறை பார்க்கலாம். வேறு தளத்தில் செல்லும் ஒரு படம். அந்தப்படத்தை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்.

இந்த உலகத்தில் எதுவுமே காப்பி கிடையாது. நம் மனதில் அல்லது நம் மூளையில் பதிந்த தகவல்கள் தான் நிறய (அல்லது அனைத்து) இடங்களில் வெளிப்படும். அதை நாம் உணர வேண்டும்.
ஒரு படைப்பு நம்மை ஒரு நொடி (அட்லீஸ்ட்) நம்மை பாதிக்க வேண்டும். அந்த வகையில் நந்தலாலா நிச்சயம் பாதிப்பை ஏற்ப்படுத்தும் ஒரு படம் தான். தமிழுக்கு புதிய படம்.
காப்பி என்று பார்த்தால் நாம் பேசவும், ப்ளோக்கில் எழுதவும், அவ்வளவு ஏன் நம்மால் ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. நிற்ப்பது, நடப்பது, பேசுவது, (உஸ்ஸ்.. அப்பா) அனைத்தும் காப்பி தான். யாரோ ஒருவரை பார்த்துதான் நாம் இவற்றை கற்றுக்கொள்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கொசுரு::
நாலு ஒலக படம் பாக்க வேண்டியது அப்புறம் நம்ம ஆளுங்க எடுக்கர படத்தையும் பாக்க வேண்டியது, காப்பி அடிச்சுட்டாய்ங்கன்னு சீன் போட வேண்டியது….

அடங்கவே மாட்டீங்களாடா ….????