கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Tag Archives: மொக்கைகள்

நண்பேன்டா – 2 …

நண்பேன்டா சீரிஸ்ல ரொம்ப நாளா  பதியணும்னு நெனச்சேன், இப்போ தான் பதிய முடிந்தது…. (நண்பேன்டா – 1 படிக்க)

சென்னையில் 6 ஆம் வகுப்பில் நான் புதிய மாணவன் என்பதால், எனக்கு நண்பர்களே கிடையாது அல்லது யாரிடமும் பேச மாட்டேன். நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல், இருந்தும் வகுப்பறைகள் மட்டமாக இருக்காது. வகுப்பறைக்குள் சாப்பாட்டுக் கூடைகளை வைக்கும் இடம் எங்களுக்கு எதிரில் ப்ளாக் போர்டுக்குப் பக்கத்தில் இருக்கும். சிமன்ட்டினால் சுவற்றில் செய்யப்பட்ட ஒரு அலமாரி அது. 11.00 மணி இன்டர்வல் அல்லது பிரேக் விடும் போது மாணவச் செல்வங்கள் அனைவரும் எழுந்து போய் எங்கள் முன்னால் சிமன்ட்டில் செய்த அலமாரியில் வைத்திருக்கும் சாப்பாட்டுக் கூடையில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிப்போம். தண்ணீர் குடித்து விட்டு சிலர் எதாவது பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். சிலர் தண்ணீர் இறக்கி விட்டு வருவார்கள் (urinal). 50 பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வைத்திருக்கும் பணக்காரர்கள் காண்டீனில் வாங்கித் தின்பார்கள் பெரும்பாலும் சமோசா தான்.

நான் யாரிடமும் பேசாத காரணத்தால், தண்ணீர் குடித்து முடித்தவுடன் பெரும்பாலும் பெஞ்சில் போய் அமர்ந்து கொள்வேன். யாரிடமும் தண்ணீர் கேட்கவும் மாட்டேன். யாரும் என்னிடம் கேட்கவும் மாட்டார்கள்.

அந்த காலத்தில் (1994), எவர் சில்வரினால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் பிரபலம். அனைத்து பள்ளிச்சிறுவர்களும் அதை தான் பயன்படுத்துவார்கள். நானும் அதற்க்கு விதிவிலக்கு இல்லாததால் அதை தான் பயன்படுத்தினேன்.

நல்லதொரு செப்டம்பர் மாதத்தில் (என்று நினைக்கிறேன்) தண்ணீர் பாட்டில் அடியில் ஓட்டையானதால், கொண்டு போன தண்ணீர் அனைத்தும் வீணாக ஆனது. இது தெரியாமல் 11.00 மணி பிரேக்கில் நான் தண்ணீர் குடிக்க சென்ற போது, காலியாக இருந்த பாட்டிலை பார்த்து அதிர்ச்சி ஆனேன். அந்த வயசுல இந்த மாதிரி மாட்டருக்கு தானங்க அதிர்ச்சி ஆவோம். பக்கத்தில் நின்றிருந்தவனிடம் தண்ணீர் கேட்க்க, அவன் கர்நாடகா, கேரளா மாதிரி “எனக்கே கொஞ்சம் தான்டா இருக்கு” னு சொல்ல, அவனுக்கு பக்கத்தில் நின்றிருந்த ஒரு பையன் “இந்தாடா குடி” என்று அவனுடைய தண்ணீர் பாட்டிலை நீட்டினான். நானும் வாங்கிக் குடித்து விட்டு பெஞ்சுக்கு போய் உட்க்கார்ந்தேன். குடிக்க தண்ணி குடுத்த பையன் கிட்ட கூட பேச மாட்டேன்க நானு (சைக்கோப் பைய, சைக்கோப் பைய…)

அவ்வளவு தான் எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகம். அது தான் எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகமாக இருக்கும் என்பது கூட எனக்கு புரியவில்லை அப்போது. ஒரு நாள் அவனுடைய அண்ணன் (அவரும் எங்கள் பள்ளியில் தான் படித்தார்), தங்கள் தந்தை இறந்து விட்டார் என்று சொல்லி அவனை எங்கள் வகுப்பில் கொண்டு வந்து விட்டார். நீண்ட விடுப்பில் இருந்து அப்போது தான் மறுபடியும் வகுப்புகளுக்கு திரும்பினான். அந்த சமயத்தில் கூட அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றவில்லை எனக்கு. பின்பு அரையாண்டுத் தேர்வுகள் வந்தது. அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும் சமயங்களில் மழைக் காலமாக இருக்கும். மழை பெய்தால், பள்ளி மைதானத்தில் அங்கங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால் செம்மண் கொண்டு வந்து தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் இட்டு நிரப்புவார்கள்.

ஏதோ ஒரு பாடப் பரீட்சை முடிந்து முதல் மாடிப் படிக்கட்டுகளில் நான் கீழிறங்கி வரும் போது, அந்தப் பையனும் என்னுடன் சேர்ந்து கொண்டான். கீழே இறங்கி வரும் போது, அவன் என்னிடம் “டே  கிரவுண்டுல இருக்கற மண்ணெல்லாம் எங்க இருந்து கொண்டு வந்திருக்காங்கன்னு தெரியுமா” னு கேட்டான். நான் “தெரியாது டா” னு சொன்னேன். அவன் “இந்த மண்ணெல்லாம் நம்ம ப்ரின்சிப்பால் மண்டேல இருந்து கொண்டு வந்தது டா” னு சொல்ல நான் விழுந்து விழுந்து சிரித்தேன். அந்த வயதில் இதெல்லாம் மிகப் பெரிய ஜோக்காச்சே. அது தான் எனக்கும் அவனுக்குமான உண்மையான அறிமுகம். ஒவ்வொரு  பரீட்சை முடிந்தவுடன் என்னுடனே என் வீடு வரை வருவான், “வீட்டுக்குள்ள வாடா”ன்னு  கூட அழைக்க மாட்டேன். நான் வீட்டிற்குள் சென்ற பின், அவன் வீட்டிற்கு கிளம்பிச் செல்வான். அந்த சமயங்களில் என்னுடைய வீட்டிற்குள் அவனை அழைத்துச் செல்வதற்கு கூட பயமாக இருக்கும், ஏன் பயந்தேன் (படிக்க கொசுறு ‘2’).

அவன் வீடு எங்கள் பள்ளிக்கு பின்புறம் இருந்தது. என்னை வீட்டில் விட்டு விட்டு, எங்கள் பள்ளியை தாண்டி அவன் வீட்டிற்க்கு செல்வான் (நடந்து தான்).

இவ்வாறாக எங்கள் நட்பு, பள்ளியில் கண்ணா மூச்சி, கிரிகெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு, பின்பு எல்லா நண்பர்களும் செய்யும் அனைத்து தப்பையும் தவறாமல் செய்து வளர்ந்தது. சென்னையில் எனக்கான இன்னொரு அற்ப்புதமான அறிமுகம் இவன் தான். இன்றும் என்னுடைய உற்ற நண்பனாக அடிக்கடி சண்டைகளுடனும், நிறைய பேச்சுகளுடனும் எங்கள் நட்பு தொடர்கிறது. காலஓட்டம், காலப்போக்கு, வைத்துப்போக்கு அனைத்திலும் எங்கள் நட்பு தொடரும் என்று நினைக்கிறேன்.

கொசுறு::

1. அவன் பெயர் சீனிவாசன். MBA (Tourism and Hotel Management) முடித்து விட்டு, தனக்கான சரியான களம் எது என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கின்றான் …

2. ஏன் பயந்தேன் என்பதை ஆராய வேண்டாம்… free yah உடுங்க …

3. இது சீனிவாசனுக்கு … இந்தப் பதிவை படித்து விட்டு, எனக்கு போன் செய்து நெஞ்சை நக்கினால், ____________________ (fill in the blanks with பேடு words) …

Advertisements

மொக்கை – 3 …

எனது real life காமெடி

மே மாதம் 2009 நாடாளுமன்ற தேர்தல் …

இடம் :: திரு-வி-க நகர் சமுதாய கூடம்

பயங்கர கூட்டம், காலை 8.30 மணிக்கு… (ரொம்ப சீக்கிரமோ) office ku லீவ் போட்டு, லைன்ல நின்னா, நின்னதுக்கு அப்புறோம் தான் தெரிஞ்சிது என் பேரு list le இல்ல …

ஓடு, கரை வேட்டி போட்ட தெரிஞ்ச ஆளு ஒருத்தர பார்த்து என் பேரு லிஸ்ட் லே இருக்கானு கேட்டேன் .. தேடி பார்த்து இல்லன்னு சொன்னாரு …

ok now confirmed, என் பேரு லிஸ்ட் லே இல்ல , ஆனா ஆபீசுக்கு லீவ் போட்டு வந்துருக்கேன் .. என்ன பண்ண ?? ..

ok சமாளிப்போம்னு சமுதாய கூடதுகே போனேன் ..

ஒரு மணி நேரம் லைன் லே நின்னேன் .. வோட்டு போடற ரூமுக்குள்ளே போனேன் .. என் பேரு இல்லன்னு சொன்னங்க (அது எனக்கே நல்லா தெரயுமே..) உடனே shocking reaction கொடுத்தேன் ..

“நல்லா தேடி பாருங்க” சார்னு சொன்னேன் .. அவங்களும் தேடி பார்த்துட்டு “உன் பேரு இல்லபா , நீ வோட்டு போடா முடியாதுன்னு” சொன்னங்க..

நான் உடனே அந்த ரூம் incharge கிட்ட போய், “சார் .. நான் இன்னைக்கு ஆபீசுக்கு லீவ் போட்டு வந்துட்டேன்னு சொன்னேன் “. அவரும் “நான் என்ன சார் பண்ணுவேன் உங்க பேரு லிஸ்ட்லே இல்ல.. லிஸ்ட் எடுக்கும் போது நீங்க வீட்லே இல்லையா ?? ” ன்னு கேட்டார் … நானும் “ஆமா சார் ” ன்னு சொன்னேன் …

டக்குனு யோசிக்கிறே மாதிரி யோசிச்சி “எனக்கு மை மட்டும் வச்சு உடுங்க சார் ன்னு சொன்னேன்” (இது என் பேர் லிஸ்ட் லே இல்லன்னு தெரிஞ்ச உடனே, நான் போட்ட பிளான் தான்..)

அவரு ஒரு நிமிஷம் என்ன பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சாரு .. (பப்பி shame தான், இருந்தாலும் என்ன பண்ண)..

உடனே மை வைக்ரவர பார்த்து “சார் .. இவரு ஆபீசுக்கு லீவ் போட்டுட்டு வந்துட்டாராம் .. அதுனாலே கொஞ்சம் மை மட்டும் வச்சிடுங்க” ன்னு சிரிசிட்டே சொன்னாரு … அவ்ளோ தான் அங்கே இருந்த அத்தனை பேரு மூஞ்சிலயும் ஒரே சிரிப்பு … ஹி ஹி ஹி ன்னு சிரிசிட்டே நானும் மைய வெரல தேய்ச்சிட்டு வந்துட்டேன் …

என்ன பண்ண நம்ம எங்க போனாலும், என்ன பண்ணாலும் காமெடி தான் … ஆனா பாருங்க அந்த ரூம் incharge அவரு வாழ்க்கைலே இந்த மாதிரி ஒரு மொக்கைய பார்திருக்கே மாட்டாரு … அங்க இருந்த எல்லாரும் தான் … 🙂

சாருவிற்கு

ஹாய் சாரு,

நான் உங்கள் ரசிகன். என்னவோ தெரியவில்லை உங்களிடம் அப்படி ஒரு ஈர்ப்பு. உங்களிடம் எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்பதால் தான் இந்த விளக்கம். ‘just be open minded and read…’

*** புத்தன் சொன்னான், துன்பத்தின் காரணம் ஆசை என்று. ஜக்கியோ எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்கிறார். அவர் அப்படிச் சொல்வதுதான் நமக்குப் பிடித்திருக்கிறது ***

புத்தன் சொல்வதாக சொல்லப்படுவது, “ஆசை தான் துன்பத்திற்கு காரணம், அதனால் ஆசைப்படுவதை விடுங்கள்”.. ஆனால் சிறிது ஆழமாக யோசித்து பார்த்தால், ஆசைப்படுவதை விட்டுஒழிப்பது என்பதே மிக பெரிய ஆசை தான்.. இது என்னை போன்ற சாமானியனால் சிந்திக்க முடிந்தது. மிக பெரிய எழுத்தாளர் உங்களுக்கு புரியாதது ஆச்சர்யமாக இருக்கிறது.

*** நமக்குப் பிடித்ததையே அவர் சொல்கிறார். இது ஒரு பரஸ்பர முதுகு சொறியும் வேலை***

ஜக்கியால் நடத்தப்படும் யோக வகுப்புகளுக்கு சென்றால் தான் தெரியும், அவர்கள் நமக்கு பிடித்ததை (முதுகு சொரிவது) சொல்கிறார்களா அல்லது, நாம் இது வரை நினைத்து கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் உடைக்கிரார்களா என்று.

*** இங்கே என்னுடைய கேள்வி என்னவென்றால், ஜக்கி விதவிதமாக உடுத்துகிறார். ஆனால் தன்னுடைய சீடர்கள் மட்டும் வெள்ளை அங்கியே அணிய வேண்டும் என்கிறார். ஏன் அப்படி என்று புரியவில்லை ***

அவர்கள் எப்பொழுதும் வெள்ளை நிற ஆடை அணிவதில்லை . இடத்திற்கு தகுந்தார் போல் தான் உடை உடுத்துகிறார்கள். அவர்கள் விளையாடும் போது (volley ball, etc) jeans, t-shirt கூட அணிகிறார்கள் . உங்கள் கவனிக்கும் திறன் அதிகரிக்க வேண்டும்.

*** ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த அவர் இப்போது ஜக்கியிடம் ஐக்கியம். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே புரியவில்லை ***

புரியாத விஷயத்தைப்பற்றி பொதுவாக யாரும் பேசுவதில்லை

*** ஒருமுறை ஜக்கியின் ஆசிரமம் சென்றிருந்தேன். அழகழகான இளம் பெண்கள் என்னை அணுகி என்னை மூளைச் சலவை செய்யும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தனர். ஒரு பெண் உண்டியலைக் கொண்டு வந்து மூக்குக்கு முன்னால் நீட்டினார் ***

இது முற்றிலும் பொய் . நானும் சென்று இருக்கிறேன் . யாரும் அவ்வாறு மூளைச் சலவை போன்ற அபத்தங்களை செய்வதில்லை . தினமும் ‘tourists’ நிறைய பேர் வருகிறார்கள் . ஆனால் யாரிடமும் அவ்வாறு மூளைச் சலவை நடந்ததில்லை. உண்டியலைக் கொண்டு வந்து யாரும் நீட்டுவதில்லை . ஆனால் உண்டியல் இருக்கிறது , விருப்பம் இருப்பவர்கள் காசு போடுகிறார்கள் . யாரும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. கவனிக்க: உங்கள் ‘website’ லும் உண்டியல் உள்ளது

*** ஜக்கியிடம் உள்ள இன்னொரு பிரச்சினை, இந்து மதத்தை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது. அப்படியானால் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் ஆகியோர் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் இல்லையா? ***

நீங்கள் அவர் பேசுவதை முழுவதுமாக கேட்கவில்லை என்று தோன்றுகிறது . (கடவுளால் படைக்கப்பட்டவர்கள்)மனிதனுக்கு வந்த முதல் பகுத்தறிவு , கலவியில் ஈடுபட்டால் குழந்தை பிறக்கும் என்பது தான் (மதன் சொன்னது ). ஒரு தலை சிறந்த எழுத்தாளராக இருந்தும் இந்த சிறிய மற்றும் சீரிய விஷயத்தை கவனிக்க தவறி விட்டீர்கள்

*** இன்று நான் கருணாநிதியை, சோனியா காந்தியை, மன்மோகன் சிங்கை என்று யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதனால் எனக்குப் பாதகம் ஏற்படாது. ஆனால் ஜக்கியை விமர்சித்தால் என் எழுத்தே காலி ***

சிரிப்பு தான் வருகிறது , அப்படி அவரை விமர்சிக்கும் பத்து பேரில் நீங்களும் ஒருவர் . அவ்வளவே!!!

***ஆனால் இவ்வளவுக்குப் பிறகும் அவருடைய வழிகாட்டுதலில் ஒருமுறை கைலாஷை தரிசிக்க வேண்டும் போல் இருக்கிறது***

நன்று… செயல்படுத்தவும்

==========================================================================================

ஒரு தனிப்பட்ட ஆளையோ அல்லது ஒரு குழுவையோ சீர்தூக்கி பார்த்து தான் நாம் அதில் இணைய வேண்டும் ஆன்மீகத்தை பொறுத்த வரை . ஏனென்றால் மருத்துவரிடமும் ஆன்மீகவாதி இடமும் தான் மக்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள் – சொன்னவர் ஜக்கி தான்