கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

நந்தகிகுலாலாஜிரோ ….

ரொம்ப நல்ல படம். ஒரு பீல் குட் பிலிம். இளையராஜா ரொம்ப நல்லா (ரொம்ப வருஷம் கழிச்சு) இசை அமைத்து இருக்கிறார். டைரக்சன், ஒளிப்பதிவு ரெண்டிலயும் பிரமாதப்படுத்தி இருக்காங்க. அப்புறம் நடிப்பு, சொல்லவே வேணாம், இருந்தாலும் சொல்ரேன், அருமை என்னும் வார்த்தையை விட வேறு சில வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை.

இப்போ பிரச்சனை என்னன்னா, இந்த படம் ஜப்பான் படத்தை காப்பி அடித்து எடுத்தது என்பது தான்.

ஏதோ நாலு பேர் சில ‘ஒலக’ படம் எல்லாத்தையும் பாக்க வேண்டியது, அப்புறம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம்னு எந்த மொழி படத்தையும் விடுவது இல்ல அந்த படம் இந்த படத்தோட காப்பி இந்த படம் அந்த படத்தோட காப்பினு பதிவு எழுத வேண்டியது.

இவங்களுக்கெல்லாம் உண்மைலே என்ன பிரச்சனைனா, நான் ஒலக படம் பாக்கர ஆளு அப்படினு மறைமுகமாக எல்லோருக்கும் உணர்த்துவதையே ரொம்ப பெருமையான விஷயமா நெனைக்கும் கூட்டம். உங்களுக்கு இருக்கர மாதிரி வாய்ப்புகள் எல்லாருக்கும் இருப்பது இல்ல. அதனால உலகப்படம்னா என்னனே தெரியாத மற்றவர்களுக்கு இந்த படம் அற்ப்புதமான படைப்பு தான்.
இப்போ காப்பி அப்படீங்கர matter க்கு வருவோம். எங்க தான் ஸார் காப்பி இல்ல. இன்னும் சொல்லப்போனா இங்க பதிவுல இருக்கும் எல்லா தமிழ் வார்தைகளுமே ஒரு விதமான காப்பி தான். யாரோ ஒருவர் கண்டுபிடிச்ச சில தமிழ் வார்த்தைகள தான் இப்போ நாம எல்லோரும் யூஸ் பண்றோம். நமக்கு ஏத்த மாதிரி தமிழ் வார்த்தைகளை adapt செய்து யூஸ் பண்றோம். அப்போ நாம எல்லாரும் ‘காப்பி காட்கள்’ தானே.

சின்ன வயசுல உங்களுக்கு சொல்லிக்கொடுத்த தமிழ் வார்த்தைகள் தான் இங்க இருக்கு. இங்கே இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுமே நாம் படித்த புத்தகங்கள், பார்த்த படங்கள், நம்முடன் பேசியவர்களின் வார்த்தைகள், etc. இவற்றை தான் இங்கே ப்ளாக்கில் வார்த்தைகளாக மாற்றி பதிவு என்னும் பெயரில் இங்கே பதிந்திருக்கிறோம். நமக்கான வார்த்தைகள் அனைத்துமே ஏதோ ஒரு வகயில் மற்றவரிடம் (மற்றவர்களிடம்) இருந்து தான் பெறப்பட்டது.

மிஷ்க்கின் கலைஞர் டீவி யில் கொடுத்து இருந்த பேட்டியில், தகேஷியும், குரசாவவும் தன்னுடைய குரு என்று சொல்லி, நந்தலாலா கதையை சொல்லுவதற்க்கு தனக்கு ஒரு களம் தேவைப்பட்டது எனவும் அது கிகுஜிரோ படத்தில் இருந்தது என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். முடிந்தால் தகேஷியுடன் அமர்ந்து அவருக்கே நந்தலாலா படத்தை போட்டுக்காட்ட வேண்டும் என்ற தனது ஆசையை சொன்னார்.

இந்தப் படம் ஒரு adaptation தான். அதில் என்ன தவறு இருக்கிறது??. புத்திசாலித்தனமான adaptation. கிகுஜிரோ படத்தை பார்த்தவர்களிடம் கேட்டால் தெரியும், கிகுஜிரோவை ஒரு முறை பார்க்கலாம். வேறு தளத்தில் செல்லும் ஒரு படம். அந்தப்படத்தை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்.

இந்த உலகத்தில் எதுவுமே காப்பி கிடையாது. நம் மனதில் அல்லது நம் மூளையில் பதிந்த தகவல்கள் தான் நிறய (அல்லது அனைத்து) இடங்களில் வெளிப்படும். அதை நாம் உணர வேண்டும்.
ஒரு படைப்பு நம்மை ஒரு நொடி (அட்லீஸ்ட்) நம்மை பாதிக்க வேண்டும். அந்த வகையில் நந்தலாலா நிச்சயம் பாதிப்பை ஏற்ப்படுத்தும் ஒரு படம் தான். தமிழுக்கு புதிய படம்.
காப்பி என்று பார்த்தால் நாம் பேசவும், ப்ளோக்கில் எழுதவும், அவ்வளவு ஏன் நம்மால் ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. நிற்ப்பது, நடப்பது, பேசுவது, (உஸ்ஸ்.. அப்பா) அனைத்தும் காப்பி தான். யாரோ ஒருவரை பார்த்துதான் நாம் இவற்றை கற்றுக்கொள்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கொசுரு::
நாலு ஒலக படம் பாக்க வேண்டியது அப்புறம் நம்ம ஆளுங்க எடுக்கர படத்தையும் பாக்க வேண்டியது, காப்பி அடிச்சுட்டாய்ங்கன்னு சீன் போட வேண்டியது….

அடங்கவே மாட்டீங்களாடா ….????

Advertisements

5 responses to “நந்தகிகுலாலாஜிரோ ….

 1. srinivasan January 21, 2011 at 18:21

  தங்களுக்கு விமர்சனத்தை தாங்கி கொள்ளும் பக்குவம் சீக்கிரம் அமையப்பெறுவது என்று ஆண்டவனை வேண்டிக்கொளவதை தவிர வேறு வழி தெரியவில்லை. சாருவை தைரியமாக சாடிய நீன்கள் மிஷ்கின் தவறு செய்த பொழுது பாராமுகமாக இருந்தால் கூட பரவா இல்லை இப்படி சப்பை கட்டு கட்டிக்கொண்டு நிற்பது சிரிப்பையும் வருத்தத்தையும் ஒரு சேர அளிக்கிறது. ஒருவரின் படைப்பை பலரை அறிய செய்யும் செவையை செய்யும் மிஷ்கின், அதன் மூலகர்தவை மறைத்து தனக்கு புகழ் தேடிக்கொள்ள முயற்சி செய்த காரியம் தான் முகம் சுளிக்க வைக்கிறது.பல காட்சிகளையும் கதாபாத்திரங்களும் மூலத்திலிருந்து எடுத்துவிட்டு கதை கருவை மட்டும் தான் கிரகித்து கொண்டன் என்பது என்ன ஞாயம் என்று புரியவில்லை.

  \\\\மிஷ்க்கின் கலைஞர் டீவி யில் கொடுத்து இருந்த பேட்டியில், தகேஷியும், குரசாவவும் தன்னுடைய குரு என்று சொல்லி, நந்தலாலா கதையை சொல்லுவதற்க்கு தனக்கு ஒரு களம் தேவைப்பட்டது எனவும் அது கிகுஜிரோ படத்தில் இருந்தது என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். முடிந்தால் தகேஷியுடன் அமர்ந்து அவருக்கே நந்தலாலா படத்தை போட்டுக்காட்ட வேண்டும் என்ற தனது ஆசையை சொன்னார்.\\\

  மேற்படியனவருக்கு அவருடைய புகழையே தர மரத்து தன்னுடைய கதை என்று உரிமை கொண்டாடியவர் நம் ஆள் என்பதை கவனிக்க. நந்தலாலா ஒரு வேலை வெற்றி அடைந்து மிஷ்கின் பெரும் புகழ் அடைந்திருந்தால் சத்தியமாக அதன் முலத்தை பற்றி வாய் திறந்திருக்க மாட்டார். அது ஒரு ஜப்பானிய படத்தின் மூலத்திலிருந்து உருவாக பட்டது என்பதையே பல பிரச்சனைகளுக்கு பிறகுதான் ஒத்துக்கொண்டவர் அவர்.

  \\\எங்க தான் ஸார் காப்பி இல்ல. இன்னும் சொல்லப்போனா இங்க பதிவுல இருக்கும் எல்லா தமிழ் வார்தைகளுமே ஒரு விதமான காப்பி தான். யாரோ ஒருவர் கண்டுபிடிச்ச சில தமிழ் வார்த்தைகள தான் இப்போ நாம எல்லோரும் யூஸ் பண்றோம். \\\\

  இது என்ன மடத்தனம்? மிஷ்கினை support seivadharkaaga ippadiya enghalai sirikka veipadhu?

  போகட்டும்.

  \\\நாலு ஒலக படம் பாக்க வேண்டியது அப்புறம் நம்ம ஆளுங்க எடுக்கர படத்தையும் பாக்க வேண்டியது, காப்பி அடிச்சுட்டாய்ங்கன்னு சீன் போட வேண்டியது….\\\
  உலக திரைப்படம் என்று தனியாக எதுவும் கிடையாது. நம்முடைய இந்திய படங்கள் கூட உலகத்தில் வியேறு என்க்ஹோ வசிப்பவர்களுக்கு உலக திரைப்படம்தான். அதை தேடி பிடித்து பார்க்கும் ரசிகர்களால் தான் இன்று மிஷ்கினின் குட்டு உடைந்தது.
  \\\ஏதோ நாலு பேர் சில ‘ஒலக’ படம் எல்லாத்தையும் பாக்க வேண்டியது,அந்த படம் இந்த படத்தோட காப்பி இந்த படம் அந்த படத்தோட காப்பினு பதிவு எழுத வேண்டியது.\\\
  உண்மை. அந்த நாலு பெரும் இல்லை என்றால் மிஷ்கினுக்கு வசதியாகத்தான் போயிருக்கும். மற்ற மொழி படங்களை தேடி பிடித்து பார்ப்பது ஒரு அறிவுப்பசி. அவர்களால் தான் உண்மைகளை இந்த முறை unmaiyai வெளிக்கொண்டு வர mudindhadhu.

  \\\உங்களுக்கு இருக்கர மாதிரி வாய்ப்புகள் எல்லாருக்கும் இருப்பது இல்ல. அதனால உலகப்படம்னா என்னனே தெரியாத மற்றவர்களுக்கு இந்த படம் அற்ப்புதமான படைப்பு தான்.\\\

  உண்மைதான். அதற்கான மூலத்தை மறைக்காமல் சொல்லி படத்தை தந்திருந்தால் நானும் மிஷ்கினை தலை மீது வெய்து கொண்டாடி இருப்பேன்.

  திரைப்படங்களை அணுகுவதில் நீன்கள் புதியவர் என்று தெரிகிறது. பரவா இல்லை. இன்னும் நிறைய படங்களை பார்க்க துவன்கவும். palvearu மொழி படன்களையும் பல நாடு படன்களையும் தொடர்ச்சியாக பார்த்து pazhagavumm. ஒரு கட்டத்தில் மிஷ்கின் எவ்வளவு பெரிய அயோக்கயதனதுக்கு அடிப்போட்டார் என்று உங்களுக்கிய புரிந்து விடும். கமலஹாசன் போன்ற மற்றவர்களும் செய்கிறார்கள் என்பதற்காக கலை திருட்டு ஒரு போதும் சரி ஆகி விடாது. அப்போது தங்கள் தங்களுடைய இந்த பதிவை பார்த்து தாங்கள் நகைப்பீர்கள். ippodhavathu மிஷ்கின் என்ற தனி மனிதர் செய்த தவறுக்காக சப்பை கட்டு கட்டிக்கொண்டு நிற்பதை விட்டு விட்டு உண்மைகளை பார்க்க பழகுங்கள்.

  \\\உண்மைகளை எதிர் கொள்பவநே மனிதன் \\\ – இதுவும் தாங்கள் சொன்னதுதான்.

 2. கேப்டன் டைகர் January 21, 2011 at 20:42

  // தங்களுக்கு விமர்சனத்தை தாங்கி கொள்ளும் பக்குவம் சீக்கிரம் அமையப்பெறுவது என்று ஆண்டவனை வேண்டிக்கொளவதை தவிர வேறு வழி தெரியவில்லை.//
  ஹா ஹா ஹா ஹா … 🙂

  எனிவே, இதை பற்றி தனியாக ஒரு பதிவே போடலாம். போடுகிறேன். 🙂

  • srinivasan January 21, 2011 at 21:52

   அந்த பதிவு தனிப்பட்ட தாக்குதலாக இல்லாமல், தங்களுடைய பதிவுக்கும் என்னுடைய கேள்விகளுக்கும் பதிலாக இருக்கும் என்றும் ,நான் எழுப்பியுள்ள விநாக்களுக்கு விடையாகவும் நந்தலாலா வில் உள்ள உண்மைகளை அறியும் முயற்சியாகவும் மட்டும் இரூந்தால் தளத்தின் சமுதாய ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ளது என்று மகிழ்ச்சி அடைவென்.

   • கேப்டன் டைகர் January 22, 2011 at 10:02

    அது நிச்சயம் அவர் அவர் பார்வையில் தான் இருக்கிறது. இப்போதைக்கு நான் வேறு activities இல் பிசி ஆக இருப்பதால், இப்போதைக்கு பதிவு கிடயாது, இது சம்பந்தமாக….

 3. கேப்டன் டைகர் January 26, 2011 at 09:48

  //சாருவை தைரியமாக சாடிய நீன்கள் மிஷ்கின் தவறு செய்த பொழுது பாராமுகமாக இருந்தால் கூட பரவா இல்லை இப்படி சப்பை கட்டு கட்டிக்கொண்டு நிற்பது சிரிப்பையும் வருத்தத்தையும் ஒரு சேர அளிக்கிறது.//

  genuine ஆன ஒரு அமைப்பைப் பற்றியும் அங்கு இருப்பவர்களைப் பற்றியும் தவறான தகவல் கொடுத்தது தான் சாரு செய்த காரியம். அது தான் கோபத்தைக் கிளறியது. வேறு ஒன்றும் இல்லை

  நந்தலாலாவும், கிகுஜிரோவும் வெவ்வேறு கதைகள் தான். இதில் என்ன சந்தேகம்.. சந்தேகமாக இருந்தால் இரண்டு படத்தையும் “நன்கு” கவனிக்கவும். டி.வி பேட்டியிலே கிகுஜிரோ inspiration தான் நந்தலாலா என்று மிஷ்க்கின் சொல்லி இருக்கிறார் (http://www.youtube.com/watch?v=kDPTqK8vssc&NR=1). சொல்லும் போது எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக தான் இதை சொன்னார். so, தகேஷிக்கான புகழ் மறுக்கப்பட்டது என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. மூலத்தை மறைக்காமல் வெளிப்படையாக டி.வி பேட்டியில், ஒரு மாஸ் மீடியாவில் சொன்னது ஒரு bold மூவ் தான். டைட்டில் கார்டில் தகேஷி பெயர் போடவில்லை என்பது தான் உங்கள் பிரச்னை.. கரெக்டா?? அதிலே எனக்கும் வருத்தம் தான். practical difficulty தான் (பணம் பாஸ் பணம் ??). என்னை பொறுத்த வரை வெளிப்படையாக சொன்னதே போதும். சொல்லாமல் இருந்தால் தான் பெரிய தவறு. சொல்லாமல் மறைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நான் எதுக்காக உண்மையை சொல்லனும் என்று நினைப்பவர்கள் மத்தியில் இவர் செய்தது பாராட்டுக்குரியது.

  // அது ஒரு ஜப்பானிய படத்தின் மூலத்திலிருந்து உருவாக பட்டது என்பதையே பல பிரச்சனைகளுக்கு பிறகுதான் ஒத்துக்கொண்டவர் அவர். //

  இது முற்றிலும் தவறு. மேலே கொடுக்கப்பட்ட லிங்கை பார்த்தால் இது புரியும்.

  //இது என்ன மடத்தனம்? மிஷ்கினை support seivadharkaaga ippadiya enghalai sirikka veipadhu?//

  இது உண்ம தான??சொல்லப் போனா ராவான உண்மை. இந்த ‘தமிழ் எழுத்து’ காப்பி பற்றி நான் சொன்னதற்கு காரணம், நெறைய பேர் இந்த ரெண்டு படத்தையும் பார்க்காமலே, காப்பி என்னும் அந்த ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு பேசியதன் விளைவு (“கடுப்பு”) தான். so இதனுள் பொதிந்து கிடக்கும் விஷயம், நாமே ஒழுங்கு இல்ல, இதுல நாம ஏன் மத்தவங்கள பத்தி பேசணும்??. கொஞ்சம் உணர்வுப்பூர்வமா யோசிச்சா, தமிழ் எழுத்து usage கூட காப்பி தான். என்ன எல்லாரும் உபயோகப்படுதரதுனால இது பெரிய விஷயமா தெரியல. (அம்மணமா எல்லாரும் இருக்கும் போது நானும் அம்மணமா இருக்கலாம் என்பது போல் தான் இதுவும்). ஒரு சின்ன உதாரணமா தான் தமிழ் எழுத்த எடுத்தேன்.

  கொசுறு1:: windows OS இன்று வரை பைரேடட் வர்ஷன் தான் உபயோகப்படுத்துகிறார்கள் 90 சதவீத மக்கள் இந்தியாவில் (may be அதிகமாகக் கூட இருக்கலாம்), corporate offices exceptional.

  //உலக திரைப்படம் என்று தனியாக எதுவும் கிடையாது. நம்முடைய இந்திய படங்கள் கூட உலகத்தில் வியேறு என்க்ஹோ வசிப்பவர்களுக்கு உலக திரைப்படம்தான்.//

  கரக்ட் தான்.. ஆனா,

  //அதை தேடி பிடித்து பார்க்கும் ரசிகர்களால் தான் இன்று மிஷ்கினின் குட்டு உடைந்தது.//

  இது தான் பிரச்சன, நான் ஒலகப் படம் பாக்கர ஆளுன்னு மத்தவங்களுக்கு காமிச்சுக்க ‘மட்டுமே’ ஒரு ‘கூட்டம்’ அலையுது. இந்தக் கடுப்புல தான் “நாலு ஒலக படம் பாக்க வேண்டியது அப்புறம் நம்ம ஆளுங்க எடுக்கர படத்தையும் பாக்க வேண்டியது, காப்பி அடிச்சுட்டாய்ங்கன்னு சீன் போட வேண்டியது….” நான் இதைத் தான் mean பண்ணேன். வேற ஒன்னும் இல்ல.

  //உண்மைதான். அதற்கான மூலத்தை மறைக்காமல் சொல்லி படத்தை தந்திருந்தால் நானும் மிஷ்கினை தலை மீது வெய்து கொண்டாடி இருப்பேன்.//

  மூலத்தை நிச்சயம் மறைக்கவில்லை பாஸ். ஒருவேளை நந்தலாலா எந்த inspirationம் இல்லாமல் நானே ரூம் போட்டு குப்புறப் படுத்து யோசிச்சதுன்னு மிஷ்க்கின் சொல்லியிருந்தா நான் இந்தப் பதிவே போட்டுருக்க மாட்டேன், மிஷ்க்கினும் மத்தவங்க மாதிரி தான்னு சொல்லிட்டு அடுத்த வேல பாக்க போய் இருப்பேன்.

  கொசுறு2:: நந்தலாலா failure film, ஆனால் முதலில் ஹிட்டடிக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

  inspirationல பண்ற எந்த ஒரு படைப்பும் தப்பு இல்லை. அதுவும் அந்த படைப்பு நல்ல படைப்பா இருக்கும் பட்சத்தில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. கம்ப்யூட்டரைப் பார்த்து inspire ஆகி கம்ப்யூட்டர் செய்யும் அனைத்து வேலையையும் செய்யும் மொபைல் போனை கண்டுபிடித்தது கூட ஒரு நல்ல படைப்பு தான். நல்ல adaptation தான். பறவை பறக்குது, நம்மால ஏன் பறக்க முடியலன்னு மனுஷன் யோசிச்சு விமானம் கண்டுபிடிச்சான் நாமளும் பறக்கலாம்னு. அது கூட inspirationல வந்த ஒரு படைப்பு தான். இன்னும் சொல்லிகிட்டே போகலாம். (inspired from: நர்சிம்).

  இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன். முடிந்தால் biased ஆகாமல் நந்தலாலாவை (மட்டும் அல்ல எந்தப் படத்தையும்) “பாருங்கள்”. அதற்க்கு முன் இவரின் முந்தைய படைப்புகளான சித்திரம் பேசுதடி, அஞ்சாதே பார்க்கவும். நீங்கள் தமிழ் படைப்புகளையும் ரசிப்பவராக இருந்தால், கற்றுக் கொள்ளவும் ரசிக்கவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது இந்தப் படங்களில்.

  இவ்வாறாகத் தான் நான் ஒரு விஷயத்தை அணுகி அதில் இருக்கும் உண்மைகளை எதிர் கொள்கிறேன். எந்த ஒரு படைப்பையும் ரசிக்க புதியவர், பழையவர் என்னும் பிரிவுகள் தேவை இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரே ஒரு தேவை open minded ஆக இருக்க வேண்டியது தான். அப்படி இருந்தால் எந்தப் படைப்பும் ஒரு தனி entity ஆகத் தெரியும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: