கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

டாக்டர் …

முன் குறிப்பு ::
முன் குறிப்பெல்லாம் ஒன்னும் இல்ல, மேட்டரு கீழ இருக்கு …

நண்பன் கமலக் கண்ணனுக்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாமல் போன போது, (பல நாள் உடம்பு சரி இல்லாமல் போகும், அதில் ஒரு நாளை) என்னுடன் கழித்தான்.

“மச்சி நல்ல டாக்டரப் போய் பாக்கனும் டா உடம்பு சரி இல்ல, கோல்டும், பீவருமா இருக்கு” னு சொன்னான். நான் அவன் கிட்ட சொன்னேன், “மச்சி நம்ம ஏரியாவுல இருக்கற டாக்டருங்க எல்லாரும் போலி டாக்டர் தான், இருந்தாலும் இவங்கள்லயே தலை சிறந்த போலி டாக்டர் யாரோ அவர தான் நாம போய் பாக்கனும் டா” னு சொன்னேன். இவ்வாறாக நாங்கள் இருவரும் முடிவெடுத்து எங்கள் ஏரியாவில் இருக்கும் ‘ஒரு’ ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.

‘அந்த’ ஆஸ்ப்பத்திரியின் ரத்த சரித்திரம்:
தோராயமாக 12 வருடம் முன்பு, உடம்பில் ஏதோ ஒரு சின்ன பிரச்னைக்காக ‘அந்த’ ஆஸ்பத்திரியின் தலைமை (??) மருத்துவர் அற்ப்புதமாக சிகிச்சை கொடுத்து, உயிரோடு இருந்தால் இந்நேரம் தனது மகனுக்கு நல்ல தந்தையாக, நன்றாக வாழ்ந்திருக்க வேண்டிய ஒருவரை, pack-up செய்து அனுப்பி வைத்த கல்வெட்டுகளைத் தாங்கி இன்றும் கம்பீரமாக நிற்க்கும் பெருமையைக் கொண்டது.

இன்றும் கூட்டம் வருகிறது ‘அந்த’ ஆஸ்பத்திரிக்கு. மலிவு விலை மருத்துவர் போல. கமலக் கண்ணன் எப்போதும் ‘cold’ க்குதான் அங்கு செல்வான். அதற்க்கு ஒரு காரனமும் சொல்வான் “அந்த டாக்டர் கொடுக்கற மருந்து போதை மருந்து மாதிரிடா.. அருமையா தூக்கம் வரும், ரெண்டு மூனு நாளைக்கு நாம ஒரு மாதிரியான போதையோடவே இருக்கலாம்” னு சொல்லுவான். ஒரு வேளை இப்படி இருக்குமோ என்று நான் நினைப்பது உண்டு. டாஸ்மாக் போனா காசு அதிகம் ஆகும், சரக்கு, மிக்சிங்கு, சைடு டிஷு, சிகரட்டு, போக வர பெட்ரோல் செலவு, இலவசமா வாந்தி வேர வரும். அதுக்கு இந்த டாக்டர் கொடுக்கர மருந்தே தேவலாம்ல.

இவ்வாறாக நண்பன் கமலக் கண்ணன் தன் உடம்பை சரி செய்து கொள்வார். கூடவே அவரின் ட்ரேட் மார்க், சேட்ஜியின் கைவண்ணத்தில் உருவான அற்ப்புத மருந்து, ‘மாவா’ வும் சேர்ந்து கொள்ள, விரைவாக குணம் அடைவார்.

வழக்கம் போல் ஒரு முறை அவருக்கு போதை தேவைப் பட்டது (அதாங்க அவருக்கு உடம்பு சரி இல்லாமப் போச்சு). எப்போதும் கமல் ஆஸ்பத்திரி செல்லும் போது துணைக்கு ஒருத்தர் வேண்டும் என்பதால், அன்று மாலை எனக்கு போன் செய்தார். நான் ஆபீசில் இருந்து வீட்டிற்க்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். திரு-வி-க நகர் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆஸ்பத்திரி 5 நிமிட தூரம் தான். நான் ஆஸ்பத்திரி சென்றதும் கமல் புற நோயாளி பகுதியில் அமர்ந்து இருந்தான்.

“எத்தனாவது ஆள் டா நீ” னு கேட்டேன், “இன்னும் மூனு பேர் இருக்காங்க டா” னு சொன்னான். எனக்கு நல்ல பசி வேற. நான் இதை அவனிடம் சொல்ல, உடனே அவனோட பஜாஜ் டிஸ்கவர் சாவிய என் கிட்ட கொடுத்து “வீட்டுக்கு போய் சாப்பிட்டு வந்து என்ன கூட்டிட்டு போ” என்றான்.

நான், “டேய் மூனு பேருக்கு அப்புறம் நீ போகனும்கரே, நான் சாப்பிட்டு வர லேட் ஆகிரும் டா” னு சொன்னேன். அதுக்கு “வெளிய போய் பேசலாம் வாடா” னு என்னைக் கூட்டிட்டு போய்,
“டே இந்த டாக்டர் ஒவ்வொருத்தருக்கும் பிரச்சனை என்னனு கேட்டு, கூகிள்ல மருந்து தேடி கண்டுபுடிச்சி கொடுக்க கண்டிப்பா லேட் ஆகும் டா, நீ போய் சாப்பிட்டு வாடா” னு சொன்னான். எனக்கு குபீர்னு சிரிப்பு வந்திருச்சு.

யோசிச்சுப் பாருங்க, டாக்டர் யாரோ ஒருத்தர் கிட்ட என்ன பிரச்சனைப்பா அப்படினு கேட்க்க, அவர் “எனக்கு cold டாக்டர்” னு சொல்ல, டாக்டர் உடனே மறச்சு வச்சிருக்கர மடிக் கணினியிய யூஸ் பண்ணி “medicines for cold” அப்படினு கூகிள்லே டைப் பண்ணி, மருந்து தேடுவாரா??. இதை நான் கமல் கிட்ட சொல்ல, ரெண்டு பெரும் ஆஸ்பத்திரி வாசல்ல நின்னு சிரிச்சிகிட்டு இருந்தோம் ……

மேலும் அந்தத் தவறான சிகிச்சையால் இறந்து போனவரின் வயதான பெற்றோர் என் வீட்டுக்கு பக்கத்து ப்ளாட்டில் தான் வசிக்கிறார்கள் என்பது இந்த தீபாவளி அன்று தான் தெரிய வந்தது. தீபாவளிப் பலகாரங்கள் கொடுக்க எங்கம்மா அவர்கள் வீட்டிற்க்கு சென்றதனால், இந்த விஷயம் எனக்குத் தெரிய வந்தது.

கொசுரு::
இந்தப் பதிவை எந்த டாக்டராவது படிக்க நேர்ந்தாலோ, அல்லது வேறு சிலர் படிக்க நேர்ந்து (தெரியாத்தனமாக), அவர்கள் மனம் புண்படுமானால், நாட்டு மருந்துக் கடைக்குச் சென்று களிம்பு வாங்கி புண்பட்ட இடத்தில் தடவிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: