கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

இறையாண்மையும் …

திருமாவளவனின் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. கண்டிப்பாக அவர் மாபெரும் எழுச்சியை கொடுப்பவர். அவரைப் பின்பற்றும் ஏராளமான தொண்டர்களைப் பார்த்தால் தெரிகிறது. முக்கியமாக அவரின் பர்சனாலிட்டி எனக்கு பிடிக்கும். நல்ல ஸ்டைலிஷ் ஆன மனிதர் என்ற வகையிலும், திருமண பந்தத்தை நினைக்காமல் மக்களை நினைத்து, மக்களுக்காக வாழும் அவரது தன்மையும் எனக்கு மிகவும் பிடிக்கும். திசம்பர் 26, திருமாவின் “தமிழர் இறையாண்மை மாநாடு” மறைமலை நகரில் நடந்தது. அதற்க்கான அழைப்பிதழ்களில் இரண்டு இங்கே இருக்கிறது (ஆதரவாளர்களின் படங்கள் வெட்டப்பட்டுள்ளன, இவ்விரண்டு படங்களிலும்).

திருவண்ணாமலையில் இருந்து அரசுப் பேருந்தில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். 4.30 மணி நேரப் பயணம் தான். ஆனால் திசம்பர் 26 அன்று மதியம் 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் பஸ் ஏறி சென்னையில் வீட்டிற்கு சென்ற போது திசம்பர் 27 அதிகாலை 1.00 மணி.
ஏகப்பட்ட கார், சுமோ, குட்டி யானை, ஷேர் ஆட்டோ என்று வரிசை கட்டி ரோட்டில் போகாமல் பறந்து கொண்டிருந்தது NH – 45 யில். ஒப்பன் லாரி, குட்டி யானையில் சென்ற தொண்டர்கள் (!!??)  பஸ், கார்களில் சென்ற பொது மக்களிடம் படு கேவலமாக நடந்து கொண்டார்கள். இவர்களில் பல பொறுக்கிகள் (தொண்டர்கள்) (குடித்து இருந்தனர்) பக்கத்தில் சென்ற அரசுப் பேருந்துகள், கார்களில் சென்ற பொது மக்களிடம் முறை தவறி நடந்து கொண்டார்கள். பஸ்ஸின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்களைக் கிண்டல் செய்வது, அவர்களைப் பார்த்து சத்தம் போடுவதுமாக சென்றார்கள்.

தொண்டர்-பொறுக்கிகள் சிலர் தங்கள் கைகளை நீட்டி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பெண்களை தொட முயற்சி செய்ததும் நடந்தது. மேல்மருவத்தூரில் வாகன நெரிசல்களில் இவர்கள் தங்கள் வாகங்களை வைத்துக் கொண்டு வீர சாகசம் புரிந்து கொண்டு சென்றார்கள். கொண்டு வந்த பிட் நோடீஸ்களை தங்கள் வாகனங்களில் இருந்து பிற வாகனங்களுக்கு நீட்டிக் கொண்டிருந்தனர் வண்டிக்குள் இருந்த படியே.

மேல்மருவத்தூர் நெரிசலில் ஒரு லாரி கிளீனர் அதை விருப்பத்துடன் வாங்க, திடீர் என்று அந்த லாரியை வழி மறித்து சுமோவை நிப்பாட்டி இறங்கிய இரண்டு பேர் ஏதோ சண்டை போடப் போய் பின் வண்டியில் ஏரிச் சென்றனர். மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்-பொறுக்கிகள் அனைவரும் பாம்பை விட மோசமாக வளைந்து நெளிந்து ரோட்டில் நடந்து சென்றனர். சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து மறைமலை நகர் ரயிலடி செல்ல சுமார் 2.45 மணி நேரம் ஆனது. அதற்க்கு மேல் பொறுமை இல்லாமல் பஸ்சில் வந்த நிறைய (எக்கச்சக்கம்) பயணிகள் இறங்கி மறைமலை நகர் ரயிலடி சென்றனர். இதனூடே சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் இன்னொரு வழித்தடம் காலியாக இருந்தது. நிறைய வாகனங்கள் அந்த வழியையும் விட்டு வைக்காமல் அங்கும் சென்றனர் (wrong route).

நானும் எனது குடும்பத்தாரும் ரயிலடி சென்றோம். அங்கு பெரும் கூட்டம். அரை மைல் நீள கூட்டத்தில் நின்று டிக்கட் வங்கத் திணறி பெண்களுக்கான ‘Q’ வில் தங்கையை நிப்பாட்டி டிக்கட் எடுத்து(ஒரு வழியாக) கடுமையான கூட்ட நெரிசலில் பார்க் செல்லும் ரயில் ஏறும் போது மணி இரவு 10.45. கூட்ட நெரிசலை சரியாகப்  பயன்படுத்திய பொம்பள பொறுக்கிகளும் இருந்தனர். சென்ட்ரல் சென்றால் இரவு உணவுக்கு எந்த ஒரு கடையும் இல்லை. (இதுக்கு தான் மதுரைல இருக்கணும்)

இறையாண்மைனா என்னனு எனக்கு தெரியாது ஆனா பொது மக்களை தொல்லை பண்ணி, பெண்களை தொல்லை பண்ணி, குழந்தைகளை தொல்லை பண்ணி ஒரு கேடு கேட்ட தொண்டர் கூட்டத்தை வைத்துக் கொண்டு மாநாடு நடத்த வேண்டுமா என்பது தான் கேள்வி??. காவலர்கள் வழக்கம் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆண்களின் நிலை கொஞ்சம் பரவாயில்லை , ஆனால் பெண்களின் நிலை??. இயற்க்கை உபாதைகளுக்கு எங்கு செல்வார்கள்??. தொலை தூரப் பிரயாணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினார்கள். பஸ்ஸை விட்டு கீழ இறங்குனா ஒரே தொண்டர்-பொறுக்கிகள் தான். சாப்பாடு இல்லாம பசியில் எத்தனை பேர் அவஸ்தை பட்டு இருப்பாங்க (என்னைப் போல் பலர்) தனிப்பட்ட சிலரின் சக்தியைக் காட்ட பொது ஜனங்களைத் தொல்லை படுத்தியது மாபெரும் தவறு.  திருமாவின் தவறு என்று எதுவும் இல்லை இங்கே. தொண்டர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும்அல்லது தவறும்  தலைவரைத் தானே நேரடியாக பாதிக்கும்.

கொசுறு::

1. தொண்டர்களில் நிறைய பேர் பார்க்க பள்ளிச் சிறுவர்கள் போல் இருந்தனர்.

2. மறைமலை நகரை அடுத்த கூடுவாஞ்சேரியில் டிராபிக் சுத்தமாக இல்லை

3. மேல்மருவத்தூரில் ஒரே ஒரு ambulance பார்த்தேன். உயிரை காப்பாற்ற திணறிக் கொண்டிருந்தது, வாகன நெரிசலில். உள்ளே இருந்த இருவர் கதவை திறந்து கீழே இறங்கி வழியை ஏற்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.

4. மேல்மருவத்தூரில் டிராபிக் ஜாமில் கண்ட ஒரு அற்புதக் காட்சி.. தொண்டர் (??) ஒருவர் சுமோவில் செல்கையில் பீர் பாட்டிலை வெளியே நீட்டி, ஆட்டிக் கொண்டே சென்றார்.

5. எதற்கு அடுத்த அம்பேத்கார், அடுத்த பிரபாகரன் போல ஜோடிக்க வேண்டும்?. தன்னுடைய ‘individuality’ ஐ எதற்கு இழக்க வேண்டும்? இவராகவே ‘இருந்து’ ஏதாவது சாதிக்கலாமே..!!!???. மக்களுக்கு நல்ல தலைவராக இருக்கலாமே.

6. பதியலாமா வேண்டாமா என்னும் தயக்கத்துடனும், ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கையாலும் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

7. வருடத்தின் கடைசிப் பதிவாக தயாரான இது, கடுப்பினால் விளைந்தது என்பதை நினைக்கும் போது சற்றே எரிச்சலாகத் தான் உள்ளது ..

(பதிந்தது 31-12-10)

======= GOOD BYE 2010 =======

********** WELCOME 2011 **********

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: