கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

ஹீரோ சீன்…

இந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது..

வீடு மாற்றி மறுபடியும் திரு-வி-க நகர் வந்து இருந்தோம். பல் தேய்க்கும் பிரஷ் வைக்க ஒரு பிளாஸ்டிக் ஸ்டான்ட் வாங்க வேண்டி இருந்தது..

2nd saturday லீவில், அண்ணா நகர் 3rd அவின்யு வில் சுற்றி கொண்டு இருந்தேன். அது என்னவோ தெரியல, அண்ணா நகர் எனக்கு ரொம்பவும் புடிச்ச ஏரியா.

அதுவும் கோல்டன் பிளாட்ஸ் வீட்டில் இருந்து, திருமங்கலத்தை தாண்டி, அண்ணா நகர் ஏரியாவுக்குள் நுழையும் போது, சான்சே இல்லை, ரொம்ப நல்லா இருக்கும்.. ஜோடியாக நடந்து போக ரொம்ப நல்ல ஏரியா. ஆனால் தனியாக நடந்து போவது என்பது ஆனந்தம். மேலும் இந்த ரோட்டில் தான் லவ் குருவிகளை அதிகம் காண முடியும். அதிகமாக டிராபிக் இல்லாத ரோடு அது. திருமங்கலத்துக்கு parallel ரோடு.

கவனிக்க::
அந்த ரோடு, அண்ணா நகர் டவர் பார்க் செல்லும் ரோடு..

அந்த ரோட்டின் கடைசியில், எனது ஆபீஸ் உள்ளது..

முன்னுரை முடிந்தது…

சரி… இப்பொழுது matterku வருவோம் …

பிரஷ் வைக்கும் ஸ்டான்ட் வாங்க எங்கெங்கோ சுற்றி, கடைசியில், ஒரு சின்ன கடையை பிடித்தேன். அந்த கடையில் ஒரு வழியாக ஸ்டாண்டை வாங்கி விட்டு பைக் park செய்திருந்த இடத்திற்கு வந்தேன்.

பைக் ஸ்டார்ட் செய்யும் போது, அருகில் நின்றின்ருந்த இரண்டு ஆட்களில் (இருவரும் 20 வயது நிரம்பிய பைய்யன்கள்) ஒருவன் என்னிடம் வந்து, “அண்ணா ஓனர் வண்டிய யாரோ ஒருத்தன் ஸ்டார்ட் பண்ணி ஓட்டிட்டு போறான். பைக் சாவி என் கிட்ட இருக்கு. ஓனர் வேற இல்ல, அவன புடிக்கணும்” னு சொன்னான்.

நானும் “சரி ஒக்காரு” னு சொல்லி, ரொம்ப வேகமா வண்டிய ஓட்டிட்டு போனேன். வண்டி ஓட்டும் போதே, மனசுக்குள்ள எதோ பயங்கரமான சேசிங் இது என்று நினைத்து, எப்புடியும் பைக் திருடுனவன புடிச்சு நாலு ஒத ஓதைக்கணும் னு நெனைச்சிட்டே வண்டிய ரொம்ப வேகமா, எதிர்லே வந்த கார கட் பண்ணி, அந்த கேவலமான ரோட்லே ஓட்னேன். (அந்த ரோட்லே இப்போதான் ட்ரைன்ஏஜ் connectionkaga தோண்டி போட்டு, மன்ன வச்சு மூடி வச்சிருந்தாங்க).

ஒரு வழியா அந்த ஆள சிக்னல் லே புடிச்சாச்சு. பின்னாடி ஒக்கார்ந்திருந்த அந்த பைய்யன் கீழ இறங்கி “ஹலோ, இந்த பைக் எங்க ஓனரோடது, பைக்க கொடுங்க” என்று சொன்னான். அதுக்குள்ள நான், இன்னைக்கு செம சண்ட இருக்கு இந்த ஆள் கிட்ட நாம ஹீரோ ஆகிடலானு நெனச்சேன்.

அந்த ஆள் 2 செகண்ட் நிதானமா என் கூட வந்த அந்த பைய்யன பார்த்து “தம்பி, உங்க ஓனர பைக் due கட்டிட்டு வண்டிய வாங்கிட்டு போக சொல்லு” னு சொன்னாரு. சொல்லி 5 செகண்ட்லே சிக்னல் விழுந்துது, அந்த ஆசாமி கெளம்பி போனாரு, அந்த பைய்யன் கீழ ஏறங்கீடான், நானும் என்னோட மண்ணு விழுந்த ஹீரோ கனவோட, சைலெண்டா வண்டிய திருப்பிட்டு வந்துட்டேன்.

கொசுறு::
நானும் எப்படியாவது ஹீரோ சீன் போட்ரலானு பாக்கறேன்… ம்ஹூம்….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: