கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

வேல …

சமீபத்தில்  வேலை  வாய்ப்பு அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது. வேறு எதற்கு, எனக்கு M.E டிகிரி பதிவதற்காக. எல்லாரும்  தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருப்பதாலும், என்னுடைய மாமா வேற “டேய், பதிஞ்சு வச்சுக்கோ டா, கவர்மென்ட் வேல தான் டா நிம்மதி” னு தொடர்ந்து சொல்லுவதாலும், வேறு வழியின்றி போனேன். இந்த பதிவே, அங்கே நான்  கண்ட சில அதிசயங்களை (!!!) பற்றி தான்.

அங்கே ஒரு ஆபீசர் இருக்கிறார். DEO (District Employment Officer) என்று போட்டிருந்த அறையில் தான் அமர்ந்தார். நடுவில் ஒரு போன் வந்த போதும் கூட, ஒரு ஊழியர் “டிஇஒ சார், உங்களுக்கு  போன்” என்று தான் சொன்னார். அந்த ‘DEO’ வை போல் வேறு எங்கும் பெரிய பதவியில் இருக்கும் (அரசு வேலையில்) ஆட்களிடம் ‘பொறுமையை’ நான் பார்த்தது இல்லை. மனுஷனுக்கு அநியாத்துக்கு பொறுமை.

சிலர் எல்லாம் பதில் சொல்லுவார்கள், இரண்டு அல்லது மூன்று கேள்விக்கு. சிலர் ஒரு அஞ்சாறு கேள்விக்கு பதில் சொல்லுவார்கள். ஆனால்  இவர் பதில் சொன்னதை பார்த்து நான் அசந்து தான் போனேன். ஒரு பத்து நிமிஷம் அவர்  பதில் சொல்லறத மட்டும் பாத்துகிட்டே இருந்தேன். நான் எதுக்காக அங்க ‘enquiry’ ல  நின்நேனோ, அத மறந்துட்டேன். அப்புறம் ஒரு வழியா அவரு என்னோட கேவலமான கேள்விக்கும் பொறுமையா பதில் சொன்னாரு. ஒருத்தர் பொறுமையா பதில் சொல்றாருங்ரத பதிலோட ஆழத்த  வச்சு சொல்லலாம். உதாரணத்துக்கு, நம்ம ஹீரோ பதில்  சொல்றது எப்படினா, அங்க இருந்த கூட்டத்துலே ஒருத்தருக்கு பதில் சொல்லறாரு::
பதிவு பண்ண வேண்டிய அந்த  நபர் எந்த ஊர்லே பதியனும், அந்த ஊர் எந்த கோட்டத்துலே வருது, அந்த ‘office’ போன் நம்பர் (போன் நம்பர ஞாபகம் வச்சிருக்காரு), கொடுக்க வேண்டிய  மனு எப்படி இருக்கணும், எவ்ளோ ரூபா ஸ்டாம்பு ஓட்டனும், ஸ்டாம்ப்ப மனுவிலே எந்த இடத்துலே ஓட்டனும், இத்தன ஆழமா இருந்திச்சு அவரோட பதில்.

இன்னும் எத்தன ஆபீஸ் போன் நம்பர ஞாபகம் வச்சிருகாருனு தெரியல (உஸ்.. அப்பா). செய்யற வேலையில ‘love’ இருந்தா தான் இந்த அளவு ‘dedication’ இருக்கும். ஆங்… சொல்ல மறந்துட்டேனே, நம்ம டிஇஒ பாக்க ஆள் எப்பிடி இருப்பருன்னா, நல்ல உயரம் (5 ’11), நல்ல கலர் (எலுமிச்சம் பழம்), ஆள் எடுப்பான சட்டை, பேன்ட் போட்டு இருந்தாரு. வயசு எப்புடியும் 33 அல்லது 35 க்குள் இருக்கும். அந்த வயசுக்கே உரிய தொப்பயொடு இருந்தார்.

நிறைய வெளியூர்க்காரங்க, அவங்க ஊர்லே பதியனுங்க்றது தெரியாம, சென்னை வந்துட்டாங்க. அவங்களுக்கும் பொறுமையா எந்த ஊர்லே பதியனுனு சொல்றாரு. (ஒருத்தர் திருவாரூர்லே இருந்து சென்னை வந்துருக்காரு, ஆனா அவருக்கு பதிய வேண்டிய இடம் மதுரை (!!!!))…
பொதுவா வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதிய வர்றவங்க எல்லார் முகத்துலயம் எப்படியாவது ஒரு அரசாங்க வேலைகிடைகாதானு ஒரு ஏக்கம்.

“எனக்கு இல்லனா கூட பரவா இல்ல என் மனைவிக்காவது அரசாங்க வேல கெடைக்கடும்”  என்ற எண்ணத்தோடு வந்தவர்களும் அதிகம். கர்ப்பிணி பெண்களும் கணவன்மார்களுடன் வந்து இருந்தனர்

ஆனா பாருங்க அங்கயும் ஒரு பொண்ணு பாய் பிரண்டோட வந்திரிச்சு. அங்க பதிவு செய்ஞ்ச ஸ்லிப் வாங்கறதுகாக எல்லாரும் வெயிட் பண்ணும் போது, அவங்க ரெண்டு பேரும் அவங்க வேலைய பார்க்க  ஆரம்பிச்சிடாங்க. அந்த பொண்ணு அப்பா என்ன பண்றாரு, எந்த ‘businees’ ல shares இருக்கு, இப்படி எல்லாத்தயும் சொல்ல ஆரம்பிச்சிடாங்க. (நான் ஒட்டு கேகலீங்க, சாதரணமா தான் ஒக்கார்ந்து இருந்தேன் அவங்க பேசிகிட்டது என் காதுல விழுந்தது)

அரசு அலுவலகமாச்சே ஏதாவது குறை::

குறைகள் கண்டிப்பா இருந்தது தான், எப்படிப்பட்ட குறைகள்னா, பதிவு செய்த பின் ரசீது சரியான நேரத்துக்கு கிடைப்பதில்லை, சிலருக்கு ரசீதில் சின்ன சின்ன பிழைகள் இருந்தது.  ஆனால் இதையெல்லாம் தாண்டி அன்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அந்த டிஇஒ வின் நடவடிக்கை தான் மேலோங்கி இருந்தது.

கொசுறு::
அவரோட பேர கேக்க மறந்துட்டேன்.. ச்சே !!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: