கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

காதலுக்கு மரியாதை…

ஆங்கில  வார்த்தைகளான  ‘infatuation’, ‘puppet love’, ‘attraction’, ‘crush’ இவை அனைவராலும் பிரயோகபடுதபடுவது. சரி இந்த வார்த்தைகளில் ஏதாவது ஒன்றை நீங்களும் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அல்லது சொல்லி இருக்க கூட வாய்ப்பு உள்ளது. உங்கள் நண்பர்களோ, நண்பிகளோ, அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, அக்காவோ, etc , சொல்லியிருக்க கூடும்.

எனக்கு தெரிந்த வரை இந்த வார்த்தைகளானது எப்போதும் ஒரு புதிய காதலுக்கான அறிகுறி தான். இல்லை என்றால் பழைய காதலை மறக்க இந்த வார்த்தைகள் உபயோகிக்கப்படும். இதன் பின்னால் நம் மனதின் ஏமாற்று வேலையே மிஞ்சி உள்ளது. அந்த ஏமாற்று வேலை ஆனது, உங்களின் இன்னொரு பாக மனதை சாந்தப்படுத்த உபயோகப்படும்.

சரி ஏன் இந்த ஏமாற்று வேலை:

சின்ன வயதில் எத்தனை பேருக்கு காதல் வந்ததது. (என்னப்பா எல்லோரும் கை தூக்குறீங்க???). சரி அட்லீஸ்ட் இந்த அளவுக்காவது உண்மை சொல்றீங்க, பாராட்டுக்கள். எத்தனை பேர் சின்ன வயது காதலை மேலே சொன்ன ஆங்கில  வார்த்தையை use பண்ணி பிறரிடம் மறைத்து இருக்கீர்கள்??. மனதின் ஏமாற்று வேலையே இப்போது தான் ஆரம்பம்  ஆகும்.

என்னுடைய நண்பன் ஒருவன் சின்ன வயதில் இருந்தே ஒரு பெண் மீது ‘love’ என்று சொன்னான். நானும்  அவனுடன் அந்த பெண்ணின் வீட்டிற்க்கு, ஒரு நியூ இயர் அன்று சென்றோம் (பையன குஷிப்படுத்தத்தான்). பையனும் புல் ஹேப்பி. அப்பிடி, இப்படின்னு ஒரு வருஷம் கழிச்சு, வேற ஒரு பெண் மீது அவனுக்கு காதல் வந்து விட்டது. அவனிடம் நான் “மச்சி  அப்போ அந்த லவ்வு” என்று கேட்க்க, நண்பன் சொன்னான், “மச்சி, அது ‘puppet’ லவ் டா, இது தான் சீரியஸ் லவ்” என்று சொன்னான். அதன் பின்பு அவன் வேறு ஒரு (!!!) பெண்ணை  திருமணமும் செய்து கொண்டான்(அதுவும் காதல் திருமணம் தான்).

இப்போ புரியுதா, நண்பனுக்கு முதலில் வந்ததும் உண்மைய்லையே காதல் தான், ஆனால் அவனின் மனம் அவனை சமாதானப்படுத்தி விட்டது.

ஏன் அவன் அந்த காதலை ‘puppet’ என்று சொன்னான்??. காரணங்களை பார்ப்போம்

  1. நண்பனின் முதல் காதல் (அதாவது ‘puppet’) நீர்த்து போனதற்கு, ஒழுங்கான தகவல் தொடர்பு இல்லாதது (‘communication gap’) ஒரு காரணம். ஏன் என்றால் அந்த பெண் வீட்டை மாற்றி விட்டு சென்று விட்டார் (இதை போன்று உங்களுக்கும் வேறு பல காரணங்கள் இருக்கலாம்)
  2. நாட்கள் செல்லசெல்ல, வயதும் அனுபவமும் கூடக்கூட முதல் பெண்ணை விட வேறு ஒரு பெண்ணின் மீது அவனுக்கு நாட்டம் வந்தது. (இதை போலவே உங்களுக்கும் வந்து இருக்கலாம், அல்லது வராமலும் போகலாம்)

இது தான் அவனுக்கு நடந்தது, ஆனால் பிறரிடம் சொல்லும் போது, எங்கே பிறர் தன்னை தப்பாக நினைப்பார்களோ என்பதால், அவன் மனம் அவனுக்கு இந்த மாதிரி ஒரு போதனையை (ஆங்கில வார்த்தைகள்) செய்தது. அவனும் ஆங்கில வார்த்தைகளால் அவன் மனதை சமதானப்படுதிவிட்டான். ‘his mind made a justification with the help of English words’.

இதனால் ‘infatuation’, ‘puppet love’, ‘attraction’, ‘crush’, etc வார்த்தைகளை use பண்ணுபவர்கள் அனைவரும் தங்கள் மனதை  சும்மா ஏமாற்று வேலை செய்து சமாதானப்படுத்தி இருப்பவர்கள் தான். மேற்சொன்ன அந்த வார்த்தைகளால் தான்  நிறைய பேர் வாழ்ந்து வருகிறார்கள். மேற்சொன்ன அந்த வார்த்தைகள் அனைத்திற்கும் மறு பெயர் காதல் தான்.

எதற்கு இந்த வார்த்தைகளை போட்டு உங்களுக்கு வந்த காதலை மறைக்க வேண்டும் ???..

இனிமேலாவது மனசுக்கு பொய் சொல்ல கற்றுக்கொடுக்காமல் இருப்போமாக.

உண்மையை எதிர் கொள்பவன் தான் மனிதன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: